பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

உரை


68. தீயன என்று கூறும் அனைத்தையும்,நீக்கிவிடு.

69. உழைத்து உண்ணும் உணவே சிறந்த உணவாகும்.

70. அமுத மாயினும் விருந்தினரோடு சாப்பிடு.

71. மழை பெய்யாவிடில் உலகில் ஒரு செயலும் நடக்காது.

72. முன்னே மின்னல், பின்னே மழை, முன்னே முயற்சி, பின்னே இன்பம்.

73. மாலுமி இல்லாமல் கப்பல் ஓடாது, தலைவன் இல்லாத
குடும்பம் சிறப்பாக நடவாது.

74. முற்பகலில் நாம் பிறர்க்கு நன்மையோ தீங்கோ செய்தால்
பிற்பகலில் நன்மையோ தீங்கோ நமக்கு வரும்.

75. பெரியோர் சொன்ன அறிவுரை அமுதம் போல் இன்பமாகும்.

76. பஞ்சணையிற் படுத்தல் நல்ல உறக்கம் தரும்.

77. உழவால் வரும் செல்வம் என்றும் குறையாது.

78. பரத்தையர் வீட்டை அணுகாமல் விலகித் தூர நட

79. பெரியோர் சொல்வதைக் கேட்க மறுத்தால் அழிவது நிச்சயம்.

80. பேச்சும் மனமும் அடங்கிய நிலையே ஞானத்தின் எல்லையாகும்.
 
81. வளம் மிக்கவன் ஆயினும் வரவுக்கு ஏற்பச் செலவழித்து
உண்ண வேண்டும்.

82. மழை குறைந்தால் கொடையும் குறையும்.

83. விருந்து செய்யாதவர்கட்கு இல்லறம் சிறக்காது.

84.வீரனது நட்பு அம்புபோல் விரைந்து உதவும்.

85. பிறரிடம் சென்று ஒன்றையும் கேட்காத உழைப்பாளரே
வலியோர் ஆவர்.

86. மனம் தளராமை எல்லா முன்னேற்றமும் தரும்.

87. தூய மனமுடையவரிடத்தில் வஞ்சகம் தோன்றாது.

88. அரசன் கோபித்தால் யாரிடமும் உதவி கிடைக்காது.

89. நாள்தோறும் எழுந்தவுடன் தெய்வத்தை வணங்கு.

90. நல்ல காற்றோடும் இடத்தில் நித்திரை செய்.

91. முறையாகப் படிக்காதவருக்குச் சிறந்த அறிவும் ஒழுக்கமும்
உண்டாவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/30&oldid=1332719" இலிருந்து மீள்விக்கப்பட்டது