கொன்றை வேந்தன்
68. பொல்லாங்கு என்பவை யெல்லாந் தவிர்.
69. போனக மென்பது தானுழந் துண்டல்.
70. மருந்தே யாயினும் விருந்தோ டுண்.
71. மாரி யல்லது காரிய மில்லை.
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாம னில்லா மரக்கல மோடாது.
74. முற்பகற் செய்யிற் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம்.
76. மெத்தையிற் படுத்தல் நித்திரைக் கழகு
77. மேழிச் செல்வங் கோழை படாது.
78. மைவிழி யார்தம் மனையகன் றொழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோன மென்பது ஞான வரம்பு.
81. வளவ னாயினும் அளவறிந் தழித்துண்
82. வானஞ் சுருங்கின் தானஞ் சுருங்கும்.
83. விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம் பாகும்.
85. உரவோ ரென்கை யிரவா திருத்தல்
86. ஊக்க முடைமை ஆக்கத்திற் கழகு.
87. வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சிறின் ஆந்துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வந் தொழு.
90. ஒத்த விடத்து நித்தி ரைகொள்.
91. ஒதாதார்க் கில்லை உணர்வோடு ஒழுக்கம்.