30
உரை
7. நீரினது உயரத்தின் அளவே அல்லிக் கொடி இருக்கும். அதுபோல ஒருவர்க்கு அவர் கற்ற நூலின் அளவே அறிவு அமையும்; செய்த தவத்தின் அளவே செல்வம் அமையும்; பிறந்த குடியின் இயல்புக்கு ஏற்றவாறே குணம் அமையும்.
8. நல்லவரைக் காண்பதும் அவர் சொற்களைக் கேட்பதும் நன்மையாகும்; அவருடைய நல்ல குணங்களைப் பேசுவதும் அவரோடு கூடியிருப்பதும் நல்லறிவும் நல்லொழுக்கமும் தரும்.
9. தீயவர்களைக் காண்பதும் அவர்கள் சொற்படி நடத்தலும் தீமையாகும். தீயவர்களின் குணங்களைப் பேசுவதும் அவர்களுடன் நட்புக் கொள்ளுதலும் தீமையாய் முடியும்.
10. நெல்லுக்கு இறைத்த நீரால் புல்லும் வளம்பெறும். அதுபோல நல்லோரைச் சார்ந்த எல்லோரும் பயனடைவர். -
11. முன்னே முளைப்பது அரிசியேயானாலும் உமி நீங்கி விடின் அரிசி முளைக்காது. ஆதலால் வல்லமை உடையார்க்கும் துணைவலிமையில்லாமல் எடுத்த காரியத்தைச் செய்ய முடியாது.
12. பெரிய இதழையுடைய தாழைக்கு மணம் இல்லை; உருவத்தில் சிறிய மகிழம்பூ இனிய மணம் உடையது. கடல் உருவத்தால் பெரியது; எனினும் அதன் நீரில் குளிக்கவும்முடியாது. கடல் அருகில் உள்ள சிறிய ஊற்று நீர் குளிப்பதற்கே அன்றிக் குடிக்கவும் பயன்படும். ஆதலால் தோற்றத்தால் பெரியவர் குணத்தால் சிறியராதலும் தோற்றத்தால் சிறியவர் குணத்தால் பெரியவராதலும் உண்டு. -
13. காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்களைக் காட்டிலும் படிப்பறிவு இல்லாதவனும் ஒருவருடைய குறிப்பை அறியாதவனும் நல்ல மரங்களாவர். காரணம் மனித மரங்கள் பார்க்கும், நடக்கும், பேசும்.
14. வான்கோழி தன்னை மயிலாக நினைத்து ஆடினாலும் மயிலாகாது. அதுபோலக் கல்லாதவன் கற்பவர்போல் நடித்தாலும் கற்றவன் ஆகான்.