பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

உரை


நல்வழி
 

7. உடம்பு நோய்களும் புழுக்களும் நிறைந்த இழிவுடையது; இத்தன்மையை ஞானிகள் அறிந்திருப்பர். ஆதலால் தாமரை இலையில் தண்ணிர் போல உடம்பின் மீது பற்றற்று இருப்பர்.

8. அளவற்ற பொருள்தேடி வைத்தாலும் ஊழினளவே நமக்குப் பயன்படும். மேலும் செல்வமோ நிலையற்றது. என்றும் நிலைபெறும் நல்லொழுக்கத்தையே தேட வேண்டும்.

9. ஆறு வற்றி வறண்ட காலத்தும் ஊற்று நீரால் உலகத்தவரை உண்பிக்கும். அதுபோல நல்ல குடியிற் பிறந்தவர் வறுமையடைந்த காலத்தும் தம்மால் இயன்ற அளவு பிறர்க்கு உதவுவர்.

10. இறந்தவர்க்காகப் பல்லாண்டுகள் அழுதாலும் அவர் திரும்பி வரமாட்டார். நாமும் ஒரு நாள் இறப்பது உறுதி. ஆதலால் இறப்பதற்குள் அறஞ்செய்து உண்டு கவலையற்று வாழ்தல் சிறப்பாகும்.

11. வயிறே, உணவு கிடைக்காத போது ஒரு நாளைக்கு உணவை விட்டிரு என்று சொன்னால் விடமாட்டாய், உணவு கிடைத்த போது இரண்டு நாளைக்குச் சேர்த்து ஏற்றுக்கொள் என்றால் ஏற்றுக் கொள்ளாய். உணவின் பொருட்டு நான்படும் துன்பங்களைச் சிறிதும் நீ அறியமாட்டாய். உன்னோடு வாழ்தல் மிகவும் கடினம்.

12. உழுது பயிர் செய்து வாழும் வாழ்க்கையே உரிமை உடையது. உயர்வுடையது. அரசாட்சி போன்ற பிற பணிகள் உரிமையற்றவை; குற்றம் வருவதற்கு வாய்ப்பு உடையவை.

13. உலகில் வாழ்வதற்கு உரியவரை அழிப்பதும், அழிதற்குரியாரை அழியாமல் தடுப்பதும், ஒழியாமல் பிச்சை எடுப்போரைத் தடுப்பதும் - நம் கையில் இல்லை. எல்லாம் ஊழின் வழியே நடக்கும்.

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/42&oldid=1332731" இலிருந்து மீள்விக்கப்பட்டது