பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

உரை

 14.

பிச்சை எடுத்து உண்பதிலும் இழிவானது பிறரிடத்தில் ஆசை வார்த்தைகள் பேசி மானமின்றி வாங்கி உண்ணுதலாம். மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிர் விட்டு மானத்தைக் காத்தல் சிறப்புடையது.

15.

‘சிவாயநம’ என்னும் திருவைந்தெழுத்தை இடையறாமல் நினைத்திருப்போர்க்கு ஒரு நாளும் துன்பம் வராது. விதியை வெல்லுவதற்கு இதுவே வழியாகும். ஏனையோர் விதியால் வெல்லப்படுவர்.

16.

நிலத்தினது நலத்தால் தண்ணிருக்கும், கொடைக்குணத்தால் நல்லோருக்கும், மாறாத கருணையால் கண்களுக்கும், கற்பொழுக்கத்தால் பெண்களுக்கும் வியக்கத் தகுந்த பெருமை உண்டாகும்.

17.

அறம் செய்தால் பாவம் நீங்கும் என்பதை உணராது

அக்காலத்தில் அறம் செய்யாதவர்கள் இப்போது வறுமையால் வாடுகிறார்கள். அவர்களுடைய வறுமைக்குக் காரணம் அவர்கள் செய்த தீவினையாகும் என்பதை உணராது தெய்வத்தை நோவதால் பயனில்லை.

18.

கஞ்சத்தனம் கருமிகள் தம்மைத் துன்புறுத்துவோர்க்கே கொடுத்து உதவுவர்; தமக்கு உதவும் பெற்றோர், பிள்ளைகள், சுற்றத்தார் முதலியவர்க்குக் கொடுக்கமாட்டார்.

19. வயிற்றுப் பசியைத் தணிப்பதற்கு வேண்டும் உணவு தேடுவதிலேயே நம் ஆயுட்கால் மெல்லாம் கழிகிறது. பெறுதற்கு அரிய உடலைப் பெற்ற நாம் அது கொண்டு பேரின்பம் பெற முயல வேண்டும்.

20. விலைமகளிரைச் சேர்பவன் அம்மிக் கல்லைத் துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கியவனைப் போல் தான் கருதிய இன்பத்தை அடையமாட்டான்.வறுமையையும் பழி பாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில் துன்புறுவான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/44&oldid=1332733" இலிருந்து மீள்விக்கப்பட்டது