நல்வழி
41
மானமே உயிரினும் சிறந்தது
14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.
சிவாய நம
15. சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்
வியத்தகு மேன்மை
16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால் கண்ணிமை மாறாக் கருணையால் - பெண்ணிமை கற்பழியா வாற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமா மென்றே யறி. - -
தீவினையே வறுமைக்கு வித்து
17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து -
அறும்பாவம் என்னவறிந்(து) அன்றிடார்க் கின்று வெறும்பானை பொங்குமோ மேல்.
அடிப்பவர்க்கே கொடுப்பர்
18. பெற்றோர் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணங் கொடுத்தாலுந் தாம்.
உயர் நோக்கம் இன்மை
19. சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழி னுடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி யரிசிக்கே நாம்.
விலைமகள் தொடர்பு
20. அம்மி துணையாக ஆறழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கும் வித்தாய் விடும்.