42
உரை
21. வஞ்சனையில்லாதவர்களுக்குத் திருமகளின் அருளால் நீர்வளமும் நிலவளமும் நல்ல விளைச்சலும் பேரும் புகழும் வளமான செல்வமும் வாழ்நாளும் உண்டாகும்.
22. வருந்தி உழைத்துப் பொருள் சேர்த்து உண்ணாமலும் அறஞ்செய்யாமலும் பொருளை மறைத்து வைக்கும் பாவிகளே! நீங்கள் இறந்தபின் அப்பொருளை யார் அனுபவிப்பர்? அவ்வளவும் வீணே.
23. நீதிமன்றத்தில் ஒரு சார்பாகப் பொய் சொன்னவன் வீட்டில் பேய் சேரும்; எருக்கஞ்செடி வளரும்; பாதாள மூலி என்னும் கொடி படரும்; மூதேவி தங்குவாள். பாம்பு குடியிருக்கும். அதாவது அவன் குடியோடு அழிவான்.
24. திருநீற்றால் நெற்றியும், நெய்யினால் உணவும், ஆற்றினால் ஊரும், உடன்பிறப்பால் உடம்பும், மனைவியினால் வீடும் மாண்பு பெறும்.
25. வரவுக்கு அதிகமாகச் செலவு செய்பவன் மானமும் அறிவும் கெட்டுப் பழி பாவங்களுக்கு ஆளாவான். நல்லவர்களாலும் வெறுக்கப்படுவான்.
26. மானம், குடிப்பிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடைமை, பதவி, தவம், உயர்வு, தொழில் முயற்சி, காதல் ஆகிய பத்தும் பசி வந்தால் பறந்து போகும். -
27. ஒரு பொருளைப் பெற நினைப்பின் அது கிடைக்காமல் வேறோரு பொருள் கிடைக்கலாம். அப்படியல்லாமல் நினைத்த பொருளும் கிடைக்கலாம். நினையாத ஒன்று கிடைத்தாலும் கிடைக்கும். இவை யாவும் இறைவன் செயல். இறைவன் கருத்துப்படியே எல்லாம் நடக்கும். நாம் நினைக்கின்றபடி ஒன்றும் நடவாது.