பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

உரை


நல்வழி

28. ஒரு நாளில் உண்பது ஒரு படியரிசிச் சோறு; உடுப்பது நான்கு முழ ஆடை, ஆனால் எண்ணுவதோ எண்பது கோடி நினைவுகள். மெய்யறிவில்லாத இத்தகைய மக்கள் அமைதியில்லாமல் துன்பமே அடைவார்கள். ஆதலால் மனவமைதி வேண்டும்.

29. மரம் பழுத்தால் யாரும் அழைக்காமல் வெளவால் அம்மரத்தை வந்தடையும். கறவைப்பசு தன்னிடம் உள்ள பாலை ஒளிக்காமல் கொடுப்பது போலத் தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் கொடுப்பவர்க்கு எல்லோரும் உறவினர்கள்.

30. முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளைப் பிரமன் விதித்தபடியே இப்பிறவியில் அனுபவிக்க வேண்டும். தீவினையால் தூண்டப்பட்டு நமக்குத் தீங்கு செய்தவரை நாம்என்ன செய்யமுடியும் 2 ஊரில் உள்ளோர் அனைவரும் ஒன்றாகக் கூடி வெறுத்தாலும் விதி போகாது.

31. இலக்கணப்பிழை உடைய பாட்டினும் உரைநடை சிறந்தது; உயர்குடிப் பிறப்பைக்காட்டிலும் ஒழுக்கம் சிறந்தது; தவறுதல் உடைய வீரத்தைக் காட்டிலும் தீராத நோய் நல்லது; குடிக்குவரும் பழிக்கு அஞ்சாத மனைவியுடன் கூடி வாழ்தலினும் தனிமை நல்லது.

32. ஆற்றுவெள்ளத்தினால் உண்டாகும் மேடும் பள்ளமும் போலச் செல்வம் வளரும், குறையும். ஆதலால் வந்து இரப்பவர்க்குச் சோறு இடுங்கள், தண்ணீரும் கொடுங்கள். அதனால் மனம் தூய்மையுற்று விளங்கும்.

33. வல்லமை பொருந்திய யானையின் உடலில் தைக்கும் அம்பு மெல்லிய பஞ்சில் பாயாது. நீண்ட இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற் பாறையானது பசுமரத்தின் வேருக்குப் பிளந்து போகும். அவ்வாறே இன்சொற்களை வன்சொற்கள்வெல்லாவாம். இன்சொற்களே வெல்லும்.

34. கல்லாதவனே யாயினும் பொருள் உடையவனாயின் எல்லோரும் அவனை வரவேற்றுப் பாராட்டுவர். கற்றவனேயாயினும் பொருள் இல்லாதவனை மனைவியும் விரும்பமாட்டாள். பெற்ற தாயும் விரும்ப மாட்டாள். அவன் சொல்லை யாரும் மதிக்க மாட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/48&oldid=1332737" இலிருந்து மீள்விக்கப்பட்டது