நல்வழி
45
28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.
கொடையாளருக்கு எல்லோரும் உறவினர்
29. மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவா தளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். .
விதியின் தன்மை
30. தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பர்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி.
இதனினும் இது நன்று
31. இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.
பொருள் இருக்கும்போதே அறம் செய்க
32. ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணிமை வீறும் உயர்ந்து.
வன்சொல்லும் இன்சொல்லும்
33. வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை
34. கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்மற்(று) ஈன்றேடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்.