பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
"சங்கத் தமிழ் மூன்றுந் தா"
வெற்றி வேற்கை என்னும்
நறுந்தொகை
அதிவீரராம பாண்டியர் இயற்றியது.
கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன் சரணவற் புதமலர் தலைக்கணி வோமே.

நறுந்தொகை படிப்பதால் வரும்பயன்


வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை யாளி குலசேகரன்புகல்
நற்றமிழ் தெரித்த நறுந்தொகை தன்னால்
குற்றங் களைவோர் குறைவிலா தவரே.

வாழிய நலனே வாழிய நலனே

1. எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

2. கல்விக் கழகு கசடற மொழிதல்

3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

4. வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்

5. மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை

6. வணிகர்க் கழகு வளர்பொருள் ஈட்டல்

7. உழவர்க் கழகிங்கு உழுதூண் விரும்பல்

8. மந்திரிக் கழகு வரும்பொருள் உரைத்தல்,

9. தந்திரிக் கழகு தறுக ணாண்மை

10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்

11. பெண்டிர்க் கழகெதிர் பேசா திருத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/53&oldid=1332742" இலிருந்து மீள்விக்கப்பட்டது