இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நறுந்தொகை
51
12. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்
13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்
14. அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல்
15. வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை
16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே.
17. தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடும்
மன்னர் கிருக்க நிழலா கும்மே.
18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்
19. சிறியோ ரெல்லாம் சிறியரும் அல்லர்
20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைகள் அல்லர்
21. உற்றோ ரெல்லாம் உறவினர் அல்லர்
22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்
23. அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
24. சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது
25. அரைக்கினுஞ் சந்தனம் தன்மணம் அறாது