பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நறுந்தொகை

53





நறுந்தொகை


26. புகைக்கினுங் காரகில் பொல்லாங்கு கமழாது


27. கலக்கினுங் தண்கடல் சேறா காது

28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய்

29. ஊட்டினும் பலவிரை உள்ளி கமழாது

30. பெருமையும் சிறுமையும் தான்தர வருமே

31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம்
பெரியோ ராயிற் பொறுப்பது கடனே

32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின்
பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே

34. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபேர்ல் வேர்க்கொள் ளாதே

35. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே

36. கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

37. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதரா கும்மே

38. நாற்பாற் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றில னாயின் கீழிருப் பவனே

39. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/57&oldid=1332746" இலிருந்து மீள்விக்கப்பட்டது