54
உரை
39. கல்வியறிவு உடையவனையே அரசனும் விரும்புவான்.
40. ஆண்மையும் அறிவும் இல்லாத பிள்ளைகளைப் பெறுவதை விட அக்குடி பிள்ளைகளே இல்லாமற் போவது நல்லது.
41. யானைக்கு நீண்ட கையிருப்பினும் அது தானமும் தருமமும் செய்வதில்லை. செல்வம் பெருகி இருப்பவரெல்லாம் தானம் செய்வதில்லை, செய்வதற்கு மனம் வேண்டும்.
42. பூனை கண்ண்ண மூடிக்கொண்டு இருந்தாலும் தவமும் அருளும் அதற்கில்லை. பொய்யான தோற்றத்தை நம்பலாகாது. -
43. உண்மை ஞானம் உடையவர்க்கு இன்பமும் துன்பமும் இல்லை.
44. கறையான் எந்தப் பொருளையும் அரித்துவிடும். அதுபோலக் கீழ்மக்கள் எதற்கும் கேடுசெய்வர்.
45. நீச்சு நிலை பாராமல் முதலை எல்லா இடத்தும் செல்லும். அதுபோல மூர்க்கர் எங்கும் சென்று தீமை செய்வர்.
46. தீமைக்கு அஞ்சுதலும் பழிக்கு நாணுதலும் முட்டாள்களிடம் இல்லை.
47. நோயாலும் வறுமையாலும் வாடியவர்களுக்கு நாளும் கோளும் இல்லை
48. வறுமைப் பட்டோர்க்கு நண்பர்களும் சுற்றமும் இல்லை.
49. செல்வமும் வறுமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.
50. குடைநிழலில் யானைமீது அமர்ந்து சென்ற அரசர், ஒரு நாள் அரசு இழந்து காலால் நடந்து எந்த ஊருக்கோ போவார்.
51. தலைமையும் செல்வமும் மேன்மையும் உடையோர் தம் நிலைமாறி உணவின்றி அறத்திற்குச் சோறுபோடும் சத்திரத்தை அடைந்தாலும் அடைவர். - -
52. வெளியில் நின்று கூவிப் பிச்சை எடுப்போர் தமது நிலைமாறி ஒருநாள் அரசாளும் பதவி பெறினும் பெறுவர்.
53. மலையளவு செல்வம் பெற்றவரும் ஒரேநாளில் அதனை இழத்தலும் கூடும்.
54. ஏழடுக்கு மாளிகைகள் அழிந்து வீழ்ந்து கழுதை மேயும் பாழ்நிலமாக ஆனாலும் ஆகும்.
55. எருதும் கழுதையும் மேய்ந்த பாழ்நிலம் பெண்ணும் ஆணும் விளையாடி நெல் நிறைந்த நகரமாகவும் மாறும்.