பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார்

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு : 17.4.1917 (மேலைச் சிவபுரி, புதுக்கோட்டை மாவட்டம்)

பெற்றோர் : வ. சுப்பையா - தெய்வானை ஆச்சி

கல்வி : அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'வித்வான்' படிப்பு, முதல் வகுப்பு தேர்ச்சி (1940) பி.ஓ.எல் - 1945; எம்.ஓ.எல் - 1948; எம்.ஏ - 1951; பி.எச்.டி - 1957.

பணி : அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 'விரிவுரையாளர்' ஏழு ஆண்டுகள் (1941-1948); காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் (1948 - 1964)

முதல்வர் : அழகப்பா கல்லூரியில் ஆறு ஆண்டுகள் முதல்வர் (1964-1970). அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் (1970-1977).

அங்கு ஏழு ஆண்டுகள் புல முதன்மையர்.


துணைவேந்தர்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (17-8-1979 - 30-6-1982); பண்டிதமணி கதிரேசனார் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியமை.

பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய துறைகள்:

1979 - எரியந்துறை,
1980 - மேலாண்மைக் கல்வி
1981 - பதிப்புத்துறை - மொழியியல்துறை
1982 - தமிழியற்புலம்.


எழுத்துப்பணி:

மனைவியின் உரிமை-முதல் நூல் - 1947.
வள்ளுவம் - 1953; தமிழ்க்காதல் - 1957; கம்பர் - 1965 (தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது).
மாணிக்கக் குறள் - 1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/6&oldid=1456891" இலிருந்து மீள்விக்கப்பட்டது