பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

உரை



நறுந்தொகை


56. வறியவர்கள் யாசிப்பது இயற்கையே யாகும்.

57. இரந்து கேட்போர்க்குக் கொடுப்பது பொருள் உடையவர்
கடமையாகும்.

58. உலகில் அளவற்ற செல்வம் பெற்றிருந்தாலும் மாண்புடைய மனைவியைப் பெறாவிடில் எப்பயனும் இல்லை.

59. அஞ்சாமையுடைய யானை உருவத்தால் பெரிதாக இருந்தாலும் சிறிய மூங்கிற் கோலுக்கு மிகவும் பயப்படும். அதுபோலத் தம்மை ஆள்வோர் இளைஞராயினும் செங்கோலுக்குக் குடிமக்கள் அஞ்சி நடப்பர்.

60. மலையும் காடும் காவலாக அமைந்திருந்த போதும், மான்
தனக்குப் பகையான புலியை நினைத்துப் பயப்படும்.

61. ஆரைப் பூண்டு நிறைந்த பள்ளத்தில் தேரை காப்பாக வாழ்ந்தாலும், பாம்பை நினைத்து மிகவும் பயப்படும்.
மனவலிமை இல்லாதவர் காப்பான இடத்தில் இருந்தாலும் மான், தேரைகளைப் போல் பகைவரை நினைத்தபோதே அஞ்சுவர்.

62. கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டில் வாழ்வதை விடக் கடும்புலி வாழும் காட்டில் வாழலாம்.

63. அறிவு ஒழுக்கங்களால் சிறந்த பெரியோர் இல்லாத பெரிய
நகரத்தில் வாழ்வதைவிட, தேன் உண்ணும் குறவர் வசிக்கும்
மலைப்பக்கம் வாழ்தல் சிறப்பாகும்.

64. காலையும் மாலையும் வேதம் ஓதாத அந்தணர் பதர் ஆவார்.

65. கொடுங்கோலனாய்க் குடிகளை வருத்தி வரிப்பொருள் வாங்கும் கொடிய அரசனும் பதரேயாவான்.

66. முதலைக் கொண்டு வாணிபம் செய்து அதனால் வரும் இலாபத்தை உண்ணாத கஞ்ச வணிகரும் பதர் ஆவார்.

67. விதையும் ஏரும் இருக்கவும், நிலத்தை உழுது பயிர் செய்யாது
சோம்பி இருக்கும் வேளாளனும் பதரேயாவான்.

68. தன்னுடைய மனைவியை அவள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்டு அவளைக் கவனியாது விடும் அறிவில்லாதவனும் பதராவான்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/60&oldid=1360057" இலிருந்து மீள்விக்கப்பட்டது