நறுந்தொகை
57
56. இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே
57. இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே
58. நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லா மில்லை இல்லில் லோர்க்கே
59. தறுகண் யானை தான்பெரி தாயினும்
சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே
60. குன்றுடை நெடுங்காட் டூடே வாழினும்
புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே
61. ஆரையாம் பள்ளத் தூடே வாழினும்
தேரைபாம் பிற்கு மிகவஞ் சும்மே
62. கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டின்
கடும்புலி வாழுங் காடு நன்றே
63. சான்றோர் இல்லாத தொல்பதி இருத்தலின்
தேன்தேர் குறவர் தேயம் நன்றே
64. காலையும் மாலையும் நான்மறை யோதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே
65. குடியலைத் திரந்துவெங் கோலோடு நின்ற
முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே
66. முதலுள பண்டம் கொண்டுவா ணிபஞ்செய்து
அதன்பய னுண்ணா வணிகரும் பதரே
67. வித்தும் ஏரும் உளவா யிருப்ப
எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே
68. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்
பின்பவட் பாராப் பேதையும் பதரே.