58
உரை
69. தன் மனைவியை வீட்டில் தனித்திருக்கச் செய்து அயலானது மனைவியை விரும்பிச் செல்லும் அறிவிலியும் பதராவான்.
70. தன் தொழிலுக்குரிய கருவியையும் தன்கைப் பொருளையும் பிறனிடம் கொடுத்துச் சோம்பியிருக்கும் அறிவிலியும் பதராவான். -
(65 முதல் 71 வரையுள்ள செய்யுட்களில் அந்தணப் பதர், அரசப் பதர், வணிகப் பதர், வேளாளப் பதர், இல்லறப் பதர், தொழிலாளிப் பதர் என ஆறுவகைப் பதர்களை ஆசிரியர் கூறியுள்ளார்.)
71. வாயே பறையாகவும் நாவே அடிகோலாகவும் கொண்டு சான்றோர் பலகாலும் சொல்லும் உறுதி மொழிகளைக் கருத்துடன் கேட்பீராக.
72. பொய்யன் சொல்லும் பொய், அவனது பேச்சுவன்மையால்
மெய்போலக் காணப்படலாம், நம்பக் கூடாது.
73. மெய்யன் சொல்லும் உண்மை, சொல்வன்மை இல்லாமையால் பொய்போலத் தோன்றக்கூடும். சிந்திக்க வேண்டும்.
74. வழக்குத் தீர்ப்பவர் இரு கட்சிக்காரர்களின் முறையீட்டையும் பலமுறை கேட்டு, இருவரும் ஏற்றுக்கொள்ளும்படி தீர்ப்புச் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லாராயின் அறமின்றி வழக்கில் தோற்றவர் அழுத கண்ணீர் அப்படித் தீர்ப்புச் சொன்னவரின் குடியை வேரோடு அழிக்கும் வாளாகிவிடும்; தேவராலும் காக்க முடியாது.
75. பழியைத் தரும் செய்திகளைப் பேசாது நீக்குக.
76. சுழித்துவரும் வெள்ளப் பெருக்கில் இறங்கக் கூடாது.
77. துணையில்லாமல் நெடுந்தூரம் போகாதே.
78. நன்றாக நீந்தத் தெரிந்திருந்தாலும் பெருவெள்ளத்தைத்
தெப்பம் இல்லாமல் கடக்கக் கூடாது.
79. பெண்கள் மீது கொண்ட காதலால் அவர்கள் கூறும்
பொருத்தமற்ற காரியங்களைச் செய்ய முயலுதல் கூடாது.
80. முறையான வழியிற் செல்க அங்ஙனமே திரும்புகண்
81. இந்நூலிற் சொல்லப்பெற்ற இந்நெறிகள் யாவும் உலக
நல்வாழ்வுக்கு ஏற்ற வழிகளாம்: