பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'

59



நறுந்தொகை


69. தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப்
பிறன்மனைக் கேகும் பேதையும் பதரே

70. தன்னா யுதமும் தன்கையிற் பொருளும்
பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே

71. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்

72. பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே

73. மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே

74. இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையா ராயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தம்
மனமுற மறுகினின் றழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளா கும்மே -

75. பழியா வருவது மொழியா தொழிவது

76. சுழியா வருபுனல் இழியா தொழிவது

77. துணையோ டல்லது நெடுவழி போகேல்

78. புனைமீதல்லது நெடும்புனல் ஏகேல்

79. எழிலார் முலைவரி விழியார் தந்திரம்
இயலா தனகொடு முயல் வாகாதே

80. வழியே ஏகுக வழியே மீளுக

81.இவைகாண் உலகிற் கியலாம் ஆறே




நறுந்தொகை முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/63&oldid=1332752" இலிருந்து மீள்விக்கப்பட்டது