62
உரை
7. மிகப்பெரிய கடலும் அகத்தியரால் உண்ணப்பட்டது. அதுபோல நாம் கல்விக்கடல் என்று செருக்குக் கொள்பவர்களும் வல்லவர் ஒருவரால் வெல்லப்படுவர். ஆதலால் செருக்குக் கொள்ளாதே.
8. வெள்ளம் வந்து ஊரைப் பாழாக்கா வண்ணம் கரைகட்டிக் காத்தலே அருமை. கரையை உடைத்தல் எளிமை. அதுபோல அறிவைக் கொன்று அழிவைத் தரும் கோபம் வாராமல், அடக்கிக் கொள்ளும் குணமே அருமை உடையது.
9. சிவபெருமானைச் சார்ந்துள்ளமையால் பாம்பு தன்னினும் வல்லமையுடைய கருடனைக் கண்டு அஞ்சாது. அதுபோன்று ஒருவன் வல்லமையுடைய ஒருவரைச் சார்ந்திருப்பின் தனது பகைவரைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
10. மதி தன்னிடத்துள்ள களங்கமாகிய இருளை நீக்குதற்கு நினையாமல் உலகில் பரந்துள்ள இருளை அகற்றி உயிர்களுக்கு இன்பம் செய்யும். அதுபோல மேலோர் தமக்கு வந்துள்ள துன்பத்தை நீக்க நினையாதவராய்ப் பிறர்க்கு வரும் துன்பத்திற்கு மனம் இளகி அதனைத் தீர்த்து வைப்பர்.
11. சுழல்காற்று தன் வலிமையால் சிறிய துரும்பைச் சுழற்றும்; கற்றூணைச் சுழற்ற மாட்டாது. அதுபோல மயங்கச் செய்யும் ஐயறிவும் புல்லறிவாளர்களைத் துன்பம் செய்யும்; நல்லறிவாளர்களைத் துன்பம் செய்ய மாட்டா.
12. பெண்ணே, ஓட்டைக் குடத்தில் நீர் நில்லாமல் ஒழுகிப் போதலே இயல்பு; ஒழுகாது நிற்றல் வியப்பு. அதுபோலன்பது ஒட்டைகளை உடைய உடம்பில் உயிர் நீங்குதல் இயல்பு; நீங்காது நிற்றலே வியப்பு.
13. பெண்ணே, திங்கள் கலைகளின் வளர்ச்சிக்கும் தேய்வுக்கும் தக்கவாறு மக்களுக்கு ஒளியைத் தரும். அதுபோல் மேன்மைக் குணம் உடையோர் தம்மிடத்துள்ள பொருள் வளர்ச்சிக்கும் குறைவுக்கும் தக்கவாறு அன்புடன் பிறர்க்குக் கொடுத்து உதவுவர். - -