நன்னெறி
63
கல்விச் செருக்கு கூடாது
7. கடலே யனையம்யாங் கல்வியா லென்னும்
அடலே றனையசெருக் காழ்த்தி - விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.
சினங்காத்தல் சிறப்பு
8. உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக்
கொள்ளுங் குணமே குணமென்க - வெள்ளம்
தடுத்த லரிதோ தடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு.
வல்லோர் துணை வலிமை
9. மெலியோர் வலிய விரவலரை யஞ்சார்
வலியோர் தமைத்தாம் மருவில் - பலியேல்
கடவு ளவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே
படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து.
விழுமியோர் இயல்பு
10. தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறுஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதா துலகில்
நிறையிருளை நீக்குமேல் நின்று.
மெய்யறிவாளரும் புலன்களும்
11. பொய்ப்புலன்க ளைந்துநோய் புல்லியர்பா லன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற்
சுழற்றுங்கொல் கற்றூணைச் சூறாவளிபோய்ச்
சுழற்றுஞ் சிறுபுன் துரும்பு.
உடம்பில் உயிர்தங்கல் வியப்பு
12. வருந்து முயிரொன்டான் வாயி லுடம்பிற்
பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய்
சீதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.
-
உள்ளதற்குத் தக உதவுக
13. பெருக்க மொடுசுருக்கம் பெற்ற பொருட்கேற்ப
விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.