பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நன்னெறி

67



நன்னெறி


        கல்லார்செருக்கு கற்றார்முன் அடங்கும்

21. எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார்
ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில்
வியுஞ் சுரநீர் மிகை.

       பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை

22. ஆக்கும் அறிவா னலது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்கு
பவரார் அரவின் பருமணிகண் டென்றுங்
கவரார் கடலின் கடு.

       மனவுறுதி வேண்டும்

23. பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல்
நிகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலைப் பேதாய் பலகால்
எறும்பூரக் கற்குழுயு மே.

       கீழோர் பிறர் குற்றமே பேசுவர்

24. உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ்
கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச்
சேக்கை விரும்பும் செழும்பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்பும் பணி.

       கீழோர் சேர்க்கையால் சிறப்புக் கெடும்

25. கல்லா அறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த
நல்லார் தமதுகனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையிற் புகுமொண் பொருள்.

       உருவத்தைக் கொண்டு மதிப்பிடாதே

26. உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணுங் கதிரொளிதான்
விண்ணளவா யிற்றோ விளம்பு.

       கைம்மாறு கருதாது உதவுக

27. கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயலுதவி தாஞ்செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/71&oldid=1332760" இலிருந்து மீள்விக்கப்பட்டது