68
உரை
28. காயாக இருக்கும் நிலையிலும் வாழை பயன்படும்; எட்டி பழுத்த நிலையிலும் பயன்படாது. அவைபோல் பேரறிவுடையவர் கோபமுள்ள காலத்திலும் கொடுப்பர்; கீழ்மக்கள் மனமகிழ்ச்சி உள்ள காலத்திலும் பிறர்க்கு ஒரு பொருளும் கொடார். -
29. இன்சொல்லாய், திங்களிடத்துள்ள மான் பூமியில் உள்ள புலிகளுக்குப் பயப்படாது. அதுபோல உயர்ந்த பரம் பொருளிடத்தே மனம் அழுந்தப் பெற்ற ஞானிகள் உடலுக்கு ஒரு கோடி துன்பம்வரினும் அச்சமடையார்.
30. வெள்ளம் வருவதற்கு முன் அணைகட்டி வைக்காதவர் வெள்ளம் பெருகும்போது யாதும் செய்ய முடியாமல் துன்புறுவர். உயிர்களைத் தவறாமல் கொண்டு செல்லும் இயமன் வருவதற்குமுன் மனங்கனிந்து அறஞ் செய்தல் வேண்டும். -
31. சிறந்த அணிகலன்களையுடைய பெண்ணே, உடம்பில் தாக்கும் பெரிய கோலின் அடியைக் கை விரைந்து போய்த் தன்மேல் தாங்கிக் கொள்ளும். அதுபோல, சான்றோர் பிறர்க்கு வரும் துன்பத்தைத் தாமே வீரமொடு தாங்கிக் காப்பர்.
32. அழகிய நெற்றியை உடையவளே, வயிரம் பொருந்திய வலிய கதவாயினும் தாழ் இல்லாவிடின் வலிமை குறைந்ததாய் விடும். அதுபோல, நூல்களிற் சொல்லப்படும் விதி விலக்குகளை அறிந்து அறம் செய்யாராயின் அதனால் வரும் சிறப்பு இல்லாது போகும்.
33. நீரைக்கட்டி வைக்கும் சிறிய குளத்திற்கே கரை காப்பு வேண்டும்; பெரிய கடலுக்குக் கரைகாப்பு வேண்டுவதில்லை. அதுபோல, அறிவில்லாத சிறியோர் தம்மைப் பிறர் இகழாவண்ணம் காத்துக் கொள்ள வேண்டும். அறிஞர்க்குக் காப்பு வேண்டுவதில்லை.
34. பெண்ணே, அழகிய ஒளியுடைய கண்களே இருளுக்கு அஞ்சும். அதுபோன்று.அறிவுடையோரே பழிக்கு அஞ்சுவர். குருட்டுக்கண் இருளைக் கண்டு அஞ்சுவதில்லை. அதுபோல அறிவிலார் பழிக்கு அஞ்சுவதில்லை.