பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நன்னெறி

69




      வெறுப்பிலும் மேலோர் உதவுவர்

28. முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக் -
கனிவினும் நல்கார் கயவர் - நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்
தாயினும் ஆமோ அறை.

      பத்தியுடையார்க்கு அச்சமில்லை

29. உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர்
அடுக்கும் ஒருகோடி யாக - நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பணிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியைமதி மான்.

      காலத்தில் அறஞ் செய்க

30. கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.

      பிறர் துயரம் தாங்குக

31. பேரறிஞர் தாக்கும் பிறர்துயரந் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது.

      முறையறிந்து அறம் செய்க

32. பன்னும் பனுவல் பயன்றேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்
காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ
தாழொன் றிலதாயிற் றான்.

      பெரியோர்க்குக் காப்பு வேண்டாம்

33. எள்ளா திருப்ப இழிஞர்போற் றற்குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே - தள்ளாக்
கரைகாப் புளதுநீர் கட்டுகுள மன்றிக்
கரைகாப் புளதோ கடல்

      பெரியோர் பழிக்கு அஞ்சுவர்

34. அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும் பிறைநுதலால்
வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்ணஞ்சு மோஇருளைக் கண்டு.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/73&oldid=1332762" இலிருந்து மீள்விக்கப்பட்டது