பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னெறி

71




       மேன்மக்கள் கற்றோரை விரும்புவர்

35. கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப் பழம்.

       தக்கார்க்கு உதவுக

36. தக்கார்க்கே ஈவர் தகார்க்களிப்பா ரில்லென்று
மிக்கார்க் குதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக் கிறைப்பரோ போய்.

       தற்புகழ்ச்சியால் தாழ்வு

37. பெரியோர்முன் தன்னைப் புகழ்ந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழும் - தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.

       நல்லோர்தொடர்பு நலம்தரும்

38. நல்லோர் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார் செயுங்கேண்மை யாகாதே - நல்லாய்கேள்
காய்முற்றின் தன்தீங் கனியாம் இளந்தளிர்நாள்
போய்முற்றின் என்னாகிப் போம்.

       தீயோர்தொடர்பு தீமைதரும்

39. கற்றறியார் செய்யுங் கடுநட்புந் தாங்கூடி
உற்றுழியுந் தீமைநிகழ் வுள்ளதே - பொற்றொடீ
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.

       அரசரினும் அறிஞரே சிறந்தவர்

40. பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தான் மற்றொவ்வார் - மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக்
காணுங்கண் ஒக்குமோ காண்.


நன்னெறி நாற்பது முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/75&oldid=1332764" இலிருந்து மீள்விக்கப்பட்டது