உலகநீதி
உரை
'உலகநீதி'யைச் சொல்வதற்கு நூலறிவால் அறிய முடியாத பெருமையினையுடைய யானைமுகக் கடவுள்துணையாவார்.
நெஞ்சமே!
1. நாள்தோறும் தவறாமல் படிக்க வேண்டும்.
யாரிடத்தும் தீயசொற்களைப் பேசக்கூடாது.
பெற்ற தாயை ஒரு பொழுதும் மறக்கக் கூடாது.
வஞ்சனை செய்பவர்களுடன் நட்புக்கொள்ளக்கூடாது.
போகத் தகாத இடங்களுக்குப் போகக் கூடாது.
ஒருவர் நேரில் இல்லாதபோது அவருடைய குறைகளைப்
பிறரிடம் கூற வேண்டாம்.
தோள் வலிமை மிகுந்த குறவர் இனத்தைச் சேர்ந்த வள்ளியின் கணவனாகிய மயிலேறும் பெருமானை வணங்குவாயாக.
மனமே! -
2. உள்ளம் அறிந்த ஒன்றை மறைத்துப் பேசாதே.
நிலையில்லாத பயனற்ற செயல்களைச் செய்யாதே.
பாம்புபோன்ற நஞ்சுடைய உயிர்களுடன் பழகாதே.
உள்ளன்பு இல்லாதவரோடு நட்புச் செய்யாதே. -
துணையில்லாமல் தனிமையாக நெடுவழி போகாதே.
உன்னை அண்டியவர்க்குக் கெடுதி செய்யாதே. -
வலிமை மிகுந்த குறவர் இனத்தைச் சேர்ந்த வள்ளியின் கணவனும் மயிலை ஊர்தியாகக் கொண்டவனுமாகிய முருகனை வணங்குவாயாக.
மனமே! *...! . . . -
3. நீ நினைத்தபடி யெல்லாம் நடக்காதே. -
பகைவனை உறவு என்று நினைத்து ஏமாறாதே.
தேடிய பொருளைக்கொண்டு நீயும் வாழ்ந்து பிறரையும்
வாழச் செய்; புதைத்து வீணாக்காதே.
அறச்செயலை ஒருநாளும் மறக்காதே.
கோபத்தை வளர்த்துத் துன்பத்தை அடையாதே.
உன்மீது கோபங்கொண்டிருப்பவர் வீட்டுவழி போகாதே.
காட்டில் விங்குகளைத் தேடும் குறவருடைய பெண்ணாகிய வள்ளியை மணந்த முருகனை வழிபடுவாயாக.