பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகநீதி

75



உலகநீதி

 

                   
பாட்டு 4


குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
     கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
     கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்.
     கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன் -
     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

                      
பாட்டு 5


வாழாமற் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்
     மனையாளைக் குற்றமொன்றுஞ் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம். -
     வெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
     தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வான குறவருடை வள்ளி பங்கன் - -
     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

                      
பாட்டு 6


வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்தபுக ழாளனொரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே.


-
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/79&oldid=1332768" இலிருந்து மீள்விக்கப்பட்டது