பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

உரை


உலகநீதி

மனமே!

7. எண்ணிப்பாராமல் எச்செயலையும் செய்ய வேண்டாம்.
கெடுங்கணக்கை ஒரு பொழுதும் பேசாதே.
பிறர் சண்டை பிடித்துக் கொள்ளும் இடத்திற்குப் போகாதே. ஊருக்குப் பொதுவிடத்தில் குடியிருக்காதே; நிலைக்காது.
இரண்டு மனைவி வாழ்க்கை ஒரு போதும் வேண்டாம்.
ஏழைகளின் பகையை வளர்த்துக் கொள்ளாதே.
பறவைகளின் நிறைந்த திணைப்புனங் காக்கும் வள்ளியின் கணவனாகிய முருகனின் திருவடியைப் புகழ்ந்து சொல்வாயாக.

மனமே!

8. சேரத்தகாத கூட்டத்தாரொடு சேராதே.
பிறர்செய்த உதவியை எக்காலத்தும் நினைக்கவேண்டும்.
ஊராரைப் பற்றிக் கோள் சொல்லி வீண்காலம் போக்காதே.
உறவினர்களை இழிவாகப் பேசாதே.
புகழ்தரும் செயல்களைத் தவறாமல் செய்.
பிறருக்குப்பொறுப்பேற்றுத் துணையில் மாட்டிக்கொண்டு அலைய வேண்டாம்.
பெருமை பொருந்திய குறத்தி வள்ளியின் கணவனான மயில்வாகனனை வணங்குவாயாக.

மனமே!

9. நடுநிலை இல்லாமல் ஊர்ப்பொது மன்றத்தில் ஒருபக்கமாகப் பேசவேண்டாம், -
மனம் கொதித்து எல்லோரிடமும் வம்பு செய்யாதே.
கருணையில்லாமல் பிறரைத் துன்புறுத்தாதே.
நீ பாரா ஒன்றைப் பார்த்தது போல அளக்காதே.
கேட்போர் மனம் புண்படும்படி கடுமையாகப் பேசாதே.
புறம் பேசிக் காலம் கழிப்பவரோடு சேராதே.
பூமியைத் தன் திருவடியால் அளந்த திருமாலின்
தங்கையாகிய உமையினது மைந்தனும் என் தலைவனுமாகிய
மயில்வாகனனை வாழ்த்துவாயாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/80&oldid=1332769" இலிருந்து மீள்விக்கப்பட்டது