பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

உரை




உலகநீதி


மனமே!

10.வெறும் வீரம் பேசுபவரோடு சேராதே.
வாதம் பேசி நடைமுறைகளை அழித்து விடாதே.
வலிமை பேசி விண்கலகம் செய்யாதே.
கடவுளை நாள்தோறும் நினைக்கவேண்டும்.
சாகும்நிலை வரினும் பொய் பேசக்கூடாது.
உன்னை இகழ்ந்த உறவினரை விரும்பாதே.
குறிசொல்லும் குறக்குடியில் பிறந்த வள்ளியின் கணவன்
முருகனின் திருப்பெயரைச் சொல்லி வழிபடுவாயாக.

மனமே!
 
11. ஒற்றுமையுள்ள ஒரு குடும்பத்தைப் பிரித்துக் கெடுக்கக்
கூடாது.
கொண்டைக்கு மேலே பூத்தெரியும்படி முடியக் கூடாது.
பிறர்மீது பழியைச் சுமத்தித் தலையிட்டு அலைய வேண்டாம்.
கொடிய குணம் உடையவரோடு நட்புச் செய்யாதே.
பெருமை மிகுந்த தெய்வத்தை இகழக்கூடாது.
வாழ்க்கையில் சிறந்து விளங்கும் பெரியோரை வெறுத்துப் பேச வேண்டாம்.
மாறுபாடு உடைய குறவர் பெண்ணாகிய வள்ளியின்
கணவனாகிய முருகனை வணங்குவாயாக.

12. உலகநாதனாகிய நான் முருகனை அருமையான தமிழில் பாட
விரும்பினேன். மிகவிரும்பி நல்ல கருத்துக்கள் பலவற்றைத் திரட்டி நன் மொழியில் 'உலகநீதி' என்னும் நூலைப் பாடினேன். இந்நூலை விரும்பிக் கற்றவர்களும் பிறர் படிக்கும்போது கேட்டவர்களும் தெளிந்த அறிவும் மகிழ்ச்சியும் பெற்று வாழ்வார்கள்; புகழும் நீண்ட வாழ்வும் பெறுவார்கள்.


உலகநீதி முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/82&oldid=1332771" இலிருந்து மீள்விக்கப்பட்டது