பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஏழிளந்தமிழ்


(நீதி நூல்கள்)

மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம்


"ஆத்தி சேர் கொன்றை அழகு தமிழ் மூதுரை
பாத்தி சேர் நல்வழி பண்புலகம் - பூத்த
நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்
குறுந்தமிழ் என்றறிந்து கொள்."

-வ.சுப.மா.

ஆத்திசூடி முதலிய இந்த ஏழு நீதி நூல்களும் நம் முன்னோர்களால் முன்பு திண்ணைப் பள்ளிகளில் முறையாகப் பயிலப் பெற்றன. இதனால், குன்றாத் தமிழ் ஒலியும், குறையாத் தமிழறிவும், வளமான தமிழ் அடிப்படையும், வாய்க்கப் பெற்றனர். முதுமையிலும் இந்த இளங் கல்வியை நினைந்து நினைந்து செம்மையாக வாழ்ந்தனர். இத்தொல் மரபுப்படி "ஏழிளந்தமிழ்' மீண்டும் தொடக்கப் பள்ளிகளில் முழு நூல்களாக இடம்பெற வேண்டும்.


இதனால் நம் இளஞ்சிறார்கள் இலக்கிய அளவிலே இயல்பான இலக்கணத்தினைப் பெற்று விடுவர். மொழித்திறம் ஊற்றுப்போல பத்து வயதிற்குள் படிந்து விடும். ஏழிளந்தமிழை இளஞ்சிறார்கள் இளமையிலே கற்று, பிஞ்சு நெஞ்சங்களில் மனப்பாடம் செய்து கொண்டால், அவர்கள் முழு வாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது உறுதி.

சொல்லில் உயர்வுதமிழ்ச்சொல்லே அதைத்
தொழுது படித்திடடி பாப்பா.

பாரதியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/9&oldid=1456893" இலிருந்து மீள்விக்கப்பட்டது