பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் இல்லை. ஆங்கிலமும் பிற பாடங்களும் உள்ளன. வற்புறுத்தல் கிட்ையாது. பள்ளியிலேயே பால் உணர்வு காட்டும் பாடங்களும் படங்களும் உள்ளனவாம். ஐந்து வயதுக்குக் கீழே தனியார் நடத்தும் விளையாட்டுப் பள்ளி கள் (Kinder garden) நடைபெறுகின்றன என்றும் பெரும் பாலும் அங்கே நூல்கள் இரா என்றும் வெறும் விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள் உள்ளன என்றும் அவற்றின் வழி எண்ணும் எழுத்தும் ஒரளவு புரியவைக்கப்பெறுகின்றன என்றும் கூறினர். மேலே, பள்ளி வகுப்பிலும் கல்லூரியிலும் உள்ள பாடங்களும் மக்கள் வாழ்வோடு தொடர்புடையன வாக இல்லா நிலையினையும் சுட்டினர். ஏறக்குறைய நம் நாட்டுக்கல்வி முறை போன்றே இங்கே கல்விமுறை அமைகின்றது எனலாம். அதட்டலோ மிரட்டலோ இல்லா மலேயே பிள்ளைகள் அடங்கி முறையாகப் பயிலும் நிலை உள்ளதாம். தமிழ்ப் பிள்ளைகள் படிப்பதற்கு என இவர்கள் நடத்தும் பள்ளிக்கும் அரசாங்கம் இடம் தந்து ஆகும் செலவிலும் (ஆசிரியர் சம்பளம் முதலியன) பெரும் பகுதி தருகின்றதாம். ஒவியம், கைத்தொழில் போன்ற வகுப்புகளும் இசை வகுப்புகளும் நடன வகுப்புகளும் நம் நாட்டு மரபுக்கு ஏற்ப இவர்கள் நடத்துவதாகவும் அதற்கெனவும் அரசாங்கம் மானியம் வழங்குவதாகவும் கூறினர். மேலும் நம் சமயக் கோயில் கட்டவும் அரசாங்கம் இடமும் பொருளும் தந்து உதவுவதைக் கூறினர். அண்மையில் இந்தப் பகுதியில் சுமார் இலட்சம் பவுனில் கட்டப் பெற்ற (15 லட்ச ரூபாய்) ஒரு முருகன் கோயிலுக்கு 50,000 பவுன் உதவியது என்றனர். மற்றும் அக் கோயில்களில் முறையாக சிறப்பொடு பூசனை, நடைபெற ஆண்டுதொறும் மானியம் (சுமார் 1 லட்சம் பவுன்) தருகிறதாம். பூசைக்கு ஒருவர், பராமரிப்புக்கு ஒருவர் என அவர்களுக்குரிய சம்பளமும் இதில் கணக்கிடப் பெறுகிறதாகும். இவ்வாறு பிற மொழியாளர்களுக்கும் பிற சமயங்களுக்கும் ஆங்கில அரசு உதவுவது சிறந்து போற்றக் கூடிய செயலாகுமன்றோ! -