பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 எழுநாடுகளில் எழுபது நாட்கள் வசதி செய்கின்றது. அப்படியே ஒய்வு பெற்றவர்களுக்கோ - வயது மூத்தவர்களுக்கோ பென்ஷன்' என்பது மட்டுமின்றி வயதானவர் வாடாவகையில் வாரந்தொறும் 50, 60 பவுன் வீதம் இனாமாகக் கொடுக்கின்றது. அப்படியே வேலையற் றோர் யாராயினும் அவர்கள் வேலையில் இருந்தால் பெறும் பங்கில் ஏறக்குறைய முக்கால் பர்கம் மானியமாக வழங்கு கின்றது. இன்னும் மக்களுக்கு வேண்டிய நல்ல தேவைகள் பெற வழிவகையும் செய்கிறது. பஸ், ரெயிலில் நான் உரோம்,பாரிஸ் ஆகிய நகரங்களில் கண்ட நிலைக்கு மாறாக இங்கே டிக்கெட் கொடுப்பது, வழியில் சரிபார்ப்பது, திரும்ப வெளிவரும்போது வாங்குவது போன்ற வழக்கம் உள்ளது. நம் நாட்டிலும் இவர்கள் ஆண்ட காலத்தில் கொண்ட அதே முறையினைத்தானே இன்றும் பின்பற்றுகிறோம். இதைப்போன்றே சமுதாயத்துக்கு அரசாங்கம் எல்லாம் நான் மேலே சுட்டிய சில உதவிகளை யும் பிறவற்றையும் யாதொரு வேறுபாடும் இன்றி நம் நாட்டு அரசாங்கம் உதவினால் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என எண்ணிப் பார்த்தேன்: செய்வார்களா? இங்குள்ள தமிழர் அனைவரும் பேசும்போது தூய. தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துகின்றனர். தமிழக அரசியலில் உண்டாகும் மாறுதல்களையும் தலைவர்தம் செயல்களையும் அறிந்து நன்கு அலசிப்பார்க்கின்றனர். எப்படியாவது உலகின் பல பாகங்களில் வாழும் தமிழினம் ஒன்றுபடவேண்டும் என எண்ணுகின்றனர். பிற நாட்டு அரசாங்கம் தமிழுக்கு உதவி செய்யும் அளவிற்குகூடத் தமிழ் நாட்டு அரசாங்கம் தன் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் செய்யவில்லையே என எண்ணி ஏங்குகின்றனர், ஈழத்தில் வாழும் தமிழருக்கு ஒன்றும் செய்ய இயலாத தமிழக அரசின் அவலநிலை கண்டு கண்கலங்குகின்றனர். பலர் பல தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். அரசாங்கத்தில் சிலரே உள்ளனர். (தன்யார் நிறுவனங்கள் அதிகமாகச் சம்பளம் தருகின்றன) எத் நிலையில் நின்றாலும்