பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{60. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் ஆசிரியப் பயிற்சி பெற்றவரோ அன்றி லண்டன், கேம்பிரிட்ஜ் பள்ளி உயர்கல்வி கற்று (நம் நாட்டு XII வருடம் நான்கு ஆண்டுகள்) ஆசிரிய்ப் பயிற்சி பெற்றவரோ ஆசிரியராகத் தகுதி உடையவர் என்றும் அதற்குக் குறைந்த நிலையரோ பயிற்சி இல்லாதவரோ ஆசிரியராக முடியாது. என்றும் கூறினார். அவர்கள் சம்பளம் சுமார் 10,000 பவுண்டு (ஒரு பவுண்டு 15 ரூபாய், ஆண்டுக்கு என்றும் கூறினார். கல்லூரி கள் தனியாக இயங்கும் நிலை (affiliated) அரிது என்றும் எல்லாப் பல்கலைக்கழகங்களுமே கல்லூரிகளாக இயங்குவன என்றும் அதில் பட்டம் முதலிய தகுதிகளைக் காணாது அறிவின் திறனறிந்து, உயர் அறிவு சான்றவரையே ஆசிரிய ராக நியமிப்பது வழக்கம் என்றும் கூறினார். நம் நாட்டில் உயர்பட்டம் முதல் வகுப்புதான் வேண்டுமென்று விளம்பரம் செய்து, பொருளின் அடிப்பண்டகூடத் தெரியாதவரும் பட்டம் பெற்றவகை கொண்டு நியமிப்பதில் உள்ள குறை யினையும் சுட்டிக்காட்டினார். அவர் அடிக்கடி இந்திய நாட்டில் சிறப்பாகத் தமிழ்நாட்டில் வந்து:கல்விநிலைபற்றி கண்டறிந்துள்ளமையைச் சுட்டினார். தமிழ்நாட்டில் பல் வகைக்கல்விமுறையிருப்பதையும் எதிலும் வரலாறு, நிலநூல் முதலியன நன்கு (Social Studies) பயிற்றப்படுவதில்லை எனவும் சுட்டினர். அரசாங்கமே பாடநூல்களை வெளியிடு வதால் நல்ல தகுதியான நூல்களைப் பிள்ளைகள் பயில வாய்ப்பு இல்லை என்றார். தமிழ்நாட்டில் ஒரு பாடத்துக்கு ஒரே நூல்ை மாணவர் பயில, இங்கு ஒரு பொருளுக்குப் புத்துக்கு மேற்பட்ட நூல்களை எடுத்துப் பயிலும் வாய்ப்பு உள்ளமையைக் குறித்தார். தமிழகத்தில் பல்கலைக்கழகங் களில் ஆய்வுகள் தரமாக நடத்தப்பெறவில்லை என்பதைச் சுட்டினார். இந்தியப்பல்கலைக் கழகங்களில் இதுவரை நடைபெற்ற ஆயிரக்கணக்கான ஆய்வுகளால் - மக்களுக்கு - வரிசெலுத்தும் பொதுமக்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆய்வுகள் ஏதோ பட்டத் துக்கென இல்லாமல் சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் அவற்றால் மக்கள் வாழ்க்கைக்குப் பயன் விளையவேண்டும்