பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ லண்டன் 14.4.85 101 எனவும் சுட்டினார். அறிவியலாயினும் வேறுதுறையாயினும் ஆய்வாளர் காணும் முடிவுகள் நாளை வாழும் மக்களினத் துக்குப் பயன்பட வழியில்லா நிலையினைச் சுட்டினார். நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் இந்த ஆய்வுத்துறைக்கெனச் செலவிடப்பெற்றும் அதனால் ஒரு காசுகூட அந்த வரிசெலுத்தும் சமுதாயத்துக்குப் பயன் இல்லை என்ற நிலைகூறி வருந்தினார். ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழகக் கல்விவரை மக்கள் வாழ்வுக்குப் பயன்படும் வகையில் அமையவேண்டும் எனவும், அதற்கென நம் இந்திய அரசாங்கமும் தமிழக அரசும் உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் சுட்டினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் சார்பில் காஞ்சியில் சமய மையம் தொடங்கிய காலத்தில், தொடங்கிவைத்த மாண்புமிகு திரு. வீரப்பன் அவர்கள் கூறிய் சொற்கள் என் நினைவிற்கு வந்தன. "இதே கருத்துக்களை வலியுறுத்தி, "ஆராய்ச்சியாளர் கள் என்னென்னவோ எழுதுகிறார்கள். புரி யாத மொழியிலே தெரி யாத பொருளைப்பற்றியெல்லாம் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிப் பட்டம் வாங்குகிறார்கள், அதனாலெல்லாம் யாருக்குப் பயன்? எத்தனை கோடி ஏழைகள் வரிப்பணம் வீணாகிறது. இங்கே நீங்கள் சமயம் தத்துவம்பற்றி ஆராயப்போகிறீர்கள். அவைபற்றியெல் லாம்பலர் பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவற்றைப் படிப்பவர் எத்தனை பேர்? படித்துப் புரிந்துகொள்பவர் எத்தனை பேர்? ஏன் இந்த நிலை? உங்கள். ஆய்வுகளை உங்களுக்குள்ளே மட்டும் தெரியும்படி எழுதுகிறீர்கள். அதனால் என்னைப்போன்ற பாமரனுக்குப் புரிவதில்லை. இந்தச் சமய மையத்தில் எழுதப்படுவனவெல்லாம் என் போன்ற சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளுமாறு இருக்கவேண்டும். அப்போது நாட்டில் சமயமும் வளரும். வரிப்பணமும் வீணாயிற்று என்ற எண்ணம் இருக்காது. அந்த வகையில் உங்கள் சமய உண்மைகள்ை எளிய