பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரிச் 15-4.85 107 அன்பர்களுக்கு நாளை பிற்பகலில் வரும் சுவிஸ் விமானத்தில் வருவதாக எழுதி உள்ளமையாலும், ஒரு செலவும் நமக் கின்றி சுவிஸ் நாட்டில் . சூரிச்சில் - ஒருநாள் தங்கும் வாய்ப் பினை நழுவவிடவேண்டாம் என்று கருதியமையாலும் முதல் இட்ட திட்டபடியே மாலை 6.50க்கு சுவிஸ்வி மானத்தில் சூரிச் புறப்பட முடிவுசெய்தேன். அதற்கென என் பெட்டி யினை ஒப்படைத்து, நியூயார்க்கில் தந்தால் போதுமென்று சொல்லி, விமானத்துக்குச் செல்ல வெளியில் வந்து காத் திருந்தேன். . . . . . . திரு. தமிழ்மணி அரங்கமுத்தையன் 5.30க்கு விமான நிலையத்துக்கு வந்தார். அவருடைய குடும்பச் சூழலுக்கு இடையே - பணிக்கு இடையே. தமிழ்மொழிக்கு ஆற்றும் தொண்டினை வியந்து போற்றினேன். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு எழுதிய கடிதங்கள் பற்றியும் அங்கிருந்து பதில் வராத நிலையினையும் சொல்லி அவற்றின் படிகளைத் தந்து, ஊர் சென்றபின் அவைபற்றி அறிந்து, ஆவன காணச் சொன்னார். மேலும் வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் தாய்மொழியை மெள்ள மறந்துவருகிறார் என்பதையும் அத்துடன் தமிழ்ப் பண்பாட்டினையே புறக் கணிக்கிறார்கள் என்பதையும் விளக்கி, அவற்றைக் காக்க . தமிழ் மக்களை இளஞ் சிறு வர் க ைள நம்மொழி, பாண்பாட்டின் வழி திருப்ப, தமிழக அரசும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் உடனடியாகப் பல செயல்களை மேற்கொள்ள வேண்டும் எ ன் ப ைத யும் விளக்க உரைத்தார். மேலும் நான்பல நாடுகள் செல்வதால் உடம்பை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்: நெடுந்தொல்ைவில் - முன்பின் அறிமுகமில்லா நண்பர் தம் பண்பும் பரிவும் என்னை மகிழ்வித்தன. அவரிடம் பிரியாவிடைபெற்று, உள்விமான தளத்திற்குச் செல்ல உரிய ந்ேரம் வந்துவிட்டமையின் செல்லப்புறப்பட்டேன். அன்பர் அவர்களும் உள்ளப் பிரியும்' நிலையில் மெல்லப் பிரிந்து சென்றார். - -