பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - ஏழு நாடுகளில் எழுபது கர்ட்கள் இடத்தில் நாம் எப்படி ஒன்றரை மாதங்கள் கழிக்கப்போகி றோம் என்ற உணர்வும் தலைகாட்டிற்று. ஊர்தொறும் உள்ள பலருக்கு வேண்டிய அன்பர்கள் கடிதங்கள் தந்தும். எழுதியும் இருந்தார்கள். என்றாலும் அவரவர்கள் எப்படி இருப்பார்களோ - பழகுவார்களோ என்ற எண்ணமும் எழுந்தது. இத்தகைய எண்ண அலைகளுக்கிடையிலே அட்லாண்டிக் கடல் அலைகளுக்கு இடையே அமைதி நிலவியது போன்று என் உள்ளத்தும் அமைதி நிலவியது. சரியாக 2.40க்கு விமானம் நியூயார்க் வந்து சேர்ந்தது. இங்கே நுழைவுச் சான்று, பிற சோதனைகள்-ஆய்வு கடுமை யாக இருந்தது. எனினும். என்னிடம் யாவும் சரியாக இருந்தமையால் தொல்லை இன்றி வெளியே வந்தேன். இலண்டனில் விட்ட என் பெட்டியும் என் கைக்கு வந்தது. விமான நிலையத்தில் யாரேனும் உளரோ எனப் பார்த்தேன். யாரும் இல்லை. எனினும் சுவிஸ் விமான உதவிப் பகுதியில் திரு. இராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு குறிப்பு வைத்திருந் தார். அவர் வர இயலா நிலையினை விளக்கி, வந்ததும் தொலைபேசியில் பேசுமாறு குறிப்பினைத் தொலைபேசி வழியேதந்துள்ளார்.உடனே பேசினேன்.வாடகை வண்டியில் நேரே வீட்டுக்கு வருமாறும் அவர் அலுவலகத்தி லிருந்து பேசியதாகவும் கூறினார். உடனே வாடகை வண்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். விமான நிலையத்தி லிருந்து சுமார் 15 கல் தொலைவு அவர் வீடு இருந்தது. நியூயார்க் அக நகரின் வழியின்றிப் புறநகர்ப் பாதையின் வழியே - அகன்ற நெடுஞ்சாலைகள் வழியே வண்டி சென்றது. சாலைகளில் கண்ட இடத்தில் வண்டிகளோ மக்களேர் கடக்கா வ்கையில் சுமார் 3 அடிக்கு மேற்பட்ட சுவர் அமைந்திருந்தது. இங்கே செல்லும்வழி வலப்பக்க மாகவே (Keep to the right) பாரிஸ், ரோம், சூரிச் போன்றே இருந்தது. ஆங்கில நாட்டில் மட்டுமே நம்முறை. சரியாக ஐந்துமணி அள்வில் வீடு சேர்ந்தேன். ஒரு பெரும் கட்டிடத் தில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றைக் குடியிருப்புப் பிரிவு (Apartments) stairäsirparis. ÉG, இராதாகிருஷ்ணன்