பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் காலம் முதலியன பற்றிய குறிப்பினைக் காண முனைந்தேன். (கிடைக்கவில்லை). - இந்த மாடியின் உச்சிக்குப் போக முடியாவிடினும் 87வது மாடி வரையில் சென்றோம். இருமுறை மேல்துக்கி (Lift). மாற வேண்டியிருந்தது. மேல் தளத்திலிருந்து பார்த்தால் கீழே பனி மூட்டம் இருந்தது, எனினும் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தது. அத்தகைய மேல்தளத்துக்கு மேலும் (சுமார் 400 அடிக்கு) கூம்பு நீண்டு கட்டப்பெற்று, அலுவலர் தனியாக ஆய்வு காணும் வகையில் அமைக்கப்பெற்றிருந்தது. நாங்க்ள் சுமார் 1000 அடி உயரம் ஏறி இருப்போம். அங்கிருந்து நியூயார்க் நகரம், அதன் சுற்றுப்புறத்தில் உள்ள கடல்கள், கழிகள், தீவுகள் நன்கு தெரிந்தன. உலகிலேயே மிகப் பெரிய நகரிலே - உலகிலேயே மிக உயர்ந்த மாளிகை யின் உச்சியிலே நிற்கின்ற பெருமிதம் எனக்கு உண்டாயிற்று. இங்கே திருச்சியின் தமிழர் இருவரும் ஆஸ்திரேலிய, ஹாலண்டு போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் என்னுடன் இருந்தனர். மனிதன் கை வண்ணத்தால் அமைந்த உலகின் உயர்ந்த மாளிகையின் உச்சியில் இருக்கி றோம் என்ற உண்ர்வோடு தரைக்கு வந்தோம். பின் பலவிடங்களுக்கு அழைத்துச் சென்றனர். பல கட்டடங்கள் 100 மாடிகள் கொண்டதாகவும் பெருவாரி யானவை 8(அ)10 மாடிகள் கொண்டனவாகவும் இருந்தன. அகன்ற தெருக்கள். பெரும்பாலான நிழற்சாலை (Avenue) என்ற பெயருடன் எண் அளிக்கப் பெற்றுள்ளன. (Avenue 1.7.11.25) அப்படியே குறுக்குத் தெருக்களும் தெரு என்ற பெயரில் (Street) எண்குறிக்கப் பெற்றுள்ளன. சிலவிடங் களில் சில பெருந்தெருக்கள் தலைவர்கள் பெயரிலும், இந் நாட்டுப் பிற மாநிலங்கள் பெயரிலும் (State names) இருந்தன. அகன்ற 120 அடி உடையனவும் அதற்கு அகல மானவையும்கூட ஒற்றைவழியாகவே (one way) இருந்தன. எனவே வண்டி ஒட்டுவதில் தொல்லை இல்லை. சாலைகளில் பலவிடங்களில் இருபுறங்களிலும் செல்வோருக்கு வசதியாக