பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 19-4.85 13: பேச்சுகள் எதிரொலித்தன. யூதர்கள் தங்கிய த்ங்கும் இடங்கள். தனியாக இருந்தன. நியூயார்க் பல்கலைக்கழகம், அவற்றின் பிரிவாகிய,மருத்துவக்கல்லூரி முதலியவற்றையும் கண்டோம். இங்குள்ள சாலையின் பெயர்களை பற்றி முன்னமே குறித்துள்ளேன். "ஆம்ஸ்டர்டாம் அவின்யூ - பல பெருங்கடைத் தெருக்கள் - பூட்டுகள் ரிப்பேர் செய்ய வும் விற்கவும் 24ம்ணி நேரமும் திறந்திருக்கும். கடைகள் இருந்தன. (Stock Exchange) என்றுள்ள பணப்புழக்கக் கட்டுப்பாட்டு இட்ம், 24மணி நேரமும்.கார்களைக் காத்துத் தரும் இடங்கள், எல்லாச் சாமான்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படியான கடைகள் பல கண்டேன். மற்றோ ரிடத்தில் (U.N. C.) போன்ற பல கொடிகள் பறந்த மாளிகை கண்டேன். அங்கே ஆப்ரகாம்லிங்கன் சிலையும் அவர் நினைவாலயமும் அழகுற நிமிர்ந்து நின்றன. மக்கள் இனத்தை ஒன்றுபடுத்த லிங்கன் மேற்கொண்ட செயல்கள் என்முன் நின்றன. சிலவிடங்களில் காலம் காட்டும் கடிகாரங்கள் மட்டு மின்றித் தட்பவெப்ப நிலைக் குறியீடுகளை அறிவிக் கும் பலகைகளும் இருந்தன. நம் நாட்டில் உள்ளமை போன்று "Super market எனப்பெறும் பெருங்கடைகளும் அனைத்தும்" 660LäGjih “Departmental store’ என்பவையும் பலவிடங்களில் இருந்தன. இந்திய மாளிகை’, என்று ஒரு கட்டடத்துக்குப் பெயர் சூட்டப்பெற்றதை அறிந்தேன். ஆயினும் அதற்குரிய காரணத்தை அறிய வில்லை. பரந்த காடுகள் போன்ற பூங்கா ஒன்றும் இருந்தது. அதை ஒட்டிய்ே கழிகளும் இருந்தன. இவை நியூயார்க் இயற்கையோடுகூடிய பெருநகரம் என்பதை நினைவூட்டின. சாலைகள்தோறும் பெருமரங்கள் இன்றேனும் சிறுமரங்கள். வரிசையாக வைக்கப்பெற்றிருந்தன. அவை நான் முன்னரே கூறியபடி இலையுதிர்க்காலம் நீங்க (Autumn) வரும் வசந்தத்தை எதிர்நோக்கித் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. அரிய மீன்காட்சிச் சாலை ஒன்றும் இருந்தது. (நாளை