பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அல்லது மறுநாள் அதைச் சென்று காணவேண்டும் என்று திட்டமிட்டேன்). இவைகளுக்கிடையில் சில காலி மனை களும் கட்டடங்கள் கட்டுவதற்கென - பல பழைய இடிந்த பகுதிகளுடன் இருந்தன. சில பழைய கட்டடங்களும் மேலே பூச்சு அற்று, உள்ளே உள்ள செங்கற்களும் நிலைகெட்டு நிற்பதனையும் அவைபற்றி யாரும் நடவடிக்கை எடுக்காது விட்டு வைத்திருப்பதையும் நினைத்தேன்.' பொருட்காட்சிச்சாலை, நூல்நிலையம் ஆகியவை உள்ள பெரிய இடங்களும், பல்கலைக்கழகங்களில் பயிலிடங் களும், 1754-56-ல் அமைத்த கொலம்பிய பல்கலைக்கழக இடங்களும், பள்ளிகள் கல்லூரிகள் ஆகிய இடங்களும் முன்வந்து சென்றன. இருநூறு ஆண்டுகளுக்குமுன் சிறு பள்ளியாகத் தொடங்கி எப்படிப் பெரிய பல்கலைக்கழக மாயிற்று என்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். 1872-ல் கட்டிய பெருங்கோயில்,போர்டுபவுண்டேஷன், ராக்பெல்லர் பவுண்டேஷன் போன்றவை அமைந்த இடங்கள், பெருஞ் சோலை போன்ற பூங்காக்கள், குறைந்த வருமானம் உடையவர்களுக்கென அரசாங்கம் கட்டி உதவிய வாழிடங் கள் பல கண்டேன். (நான் முன்னரே சுட்டியபடி இங்கேயும், குடிசைகள் இல்லை.) நம் ஊரில் குடிசைமாற்று வாரியம் மிகுந்த முயற்சியோடு பலருக்கு வாழிடம் கட்டித்தந்தும், மேலும் மேலும் குடிசைகள் வளர்ந்து வருவதைக் கண்ட எனக்கு, குடிசையே இல்லாத இந்த நகரின் சிறப்பினை எண்ணி மகிழ்ச்சி பிறந்தது. நம் நாடு என்று இந்த நிலைக்கு வருவது என்று ஏங்கினேன். • - f - பெரிய மருத்துவமனையினைக் கண்டேன். பலவிடங் களில் மருத்துவர்கள் (நம் நாட்டவர் உட்பட) வாழிடங்கள் முன் பெயர்ப்பலகை இருப்பதை இங்கே கண்ட நான் இப் பெரிய மருத்துவமனையினையும் கண்டபோது, இங்கும் நோயாளிகளுக்குக் குறைவில்லை என்பதை எண்ணத் தூண்டிற்று. மேலும் இங்கே யாரும் மருந்துகளை டாக்டர் குறிப்பு, இன்றி வாங்க முடியாதாம். எவ்வளவு தெரிந்த