பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூயார்க் 20.4.85 135 வாயற்றன எனப் பல). முதலில் மரங்கள் தோன்றின என்ற குறிப்புடன் (First Dinosaurs), என்ற முதல் குடும்பம், (Mammal) மாமல் பற்றிய விளக்கங்கள், எலும்புக்கூடுகள், கங்காரு போன்றவை, (Mummy), மம்மி வகை பல. அவை காலந்தொறும் வளர்ச்சி அடைந்தநிலை, ஆஸ்திரேலியாவி லிருந்து (Marsupial) என்ற பைமாவின உயிர்வகை (Coryth. osaurus) என்ற பிற்காலத்தியவை போன்றன முறையாக வைக்கப் பெற்றிருந்தன. இடையில் அவை கல்லாயிருந்த நிலை (Fossil) பற்றிய விளக்கமும் இருந்தது. பின் (Mammal) மாமல் இரண்டாம் முறை உலகில் தோன்றிய விதம், கால்ம் 60 மில்லியன் ஆண்டுகள் எனக் கணக்கிட்டு: அதற்கு Eocene எனப் பெயரிட்டு அது உலகில் பரவிய விதத்தினை நன்கு விளக்கியுள்ளனர். பின் 6 மில்லியன் காலத்தில் உயிர்களின் நிலைமாற்றத்தினையும் பிற வளர்ச்சிகளையும் காட்டியுள்ளனர். காலக்குறிப்பினை விளக்கும்போது-ஐம்பது மில்லியன் ஆண்டுகளுக்குட்பட்ட நிலையில் ஓரிடத்தில் இமயம், ஆல்ஸ் மு. த லிய பெருமலைகள் வளரத் தொடங்கிய காலத்தில் என்ற குறிப்பு இருந்தது. அக்காலத்தில் விந்திய மலைக்குத் தெற்கே உயிரினம் வளர்ந்த நிலையினைக் காட்டி உள்ளனர். அப்போதுதான் நம் தமிழ் மக்கள் இமயம் கடலுள் ஆழ்ந்த காலத்தையும் தெற்கே குமரிக்கண்டம் (லெமூரியா) இருந்த நிலையினையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய அறிவுத்திறனைப் போற்ற முடிந்தது. மேலும் ஓரறிவுடைய உயிர் தொடங்கி.(மரம்) உயிரினம் வளர்ந்த வகையினை நம் மக்கள் நேரடியாகவும் பல்வேறு. கதைகள் வழியாகவும் விளக்கிய உண்மையும் எவ்வளவு சரி என்பதும் புலப்பட்டது. - பின் கடந்த 30 மில்லியன் ஆண்டுகளின் பல்வேறு உயிரினங்களின் கலப் பால் தோன்றிய விலங்குகள், பறவைகள் பற்றிய குறிப்புகளும் இருந்தன. (எல்லாக் குறிப்புகளும் 3000 மில்லியன் ஆண்டு முதல் அததற்குரிய மூலப்பொருள்காட்சியுடனேயே இருந்தன).அவ்வாறு தோன்