பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூயார்க் 20.4.85 137 வாழ்வின் வளர்ச்சி. பின் தரைவாழ் உயிரினங்கள் (Plants inværtebtat 23) 2 N 55 vertebrate3,(žhordate3 mammalien ) பற்றிய ஆய்வும் உலக உயிரின வளர்ச்சி வரலாறு எனக் காட்டப்பெறுகின்றது. இந்திய ஆமை (6'நீ 6 அ4 உயரம்) ஒன்றும் காட்சிப் பொருளாக இருந்தது. விவிலிய நூலில் smello.u ‘Speak to the Earth and it Shall teach Thee' (Job 128)வாசகம் அழகாகப் பொறிக்கப் பெற்றுள்ளது.இவற்றை யெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் எழுதி வைத்ததை .பாவம் இவர்கள் அறியார் போலும்! எங்கும் அவை பற்றிய குறிப்பு இல்லை . . ஒருவகையாக நான்காவது மாடியினை முடித்துக் கொண்டு - சற்றே களைப்பாக இருந்தமையால், கீழே வந்து சிறிது உணவும் குளிர் நீரும் பருகினேன். பின் மற்றைய மூன்று மாடிகளில் உள்ளவற்றை காண முயன்றேன். (மேல் ஐந்தாவது மாடியிலும் அடித்தளத்திலும் காட்சிச் சாலை கள் இல்லை வேறு இவை பற்றிய அலுவலகங்கள் கடைகள் பிற இருந்தன). மூன்றாவது மாடியில் அமெரிக்க நாட்டிலும் (U.S.A.) அதைச்சுற்றிலுமுள்ள நாடுகளிலும் உள்ள மக்களின் தொன்ம்ை காணும் வகையில் பலப்பல பொருள்கள் வைக்கப் பெற்றிருந்தன. நியூயார்க் நகரைச் சுற்றி வாழ்ந்த மக்கள் வாழ்வு, அவர்களின் வாழ்க்கை முறை, பயன்படுத்திய பொருள்கள், ஆயுதங்கள், உடைகள், பழங்கால வாழ்விடங் கள் (குடிசைகள்) ஊதுகுழல்கள் முதலியன வைக்கப்பெற்றி ருந்தன. பின் , பசிபிக்கடலை ஒட்டிய மக்கள் வாழ்வு, விளையாட்டு,வினை செயல்கள். இசைக் கருவிகள்,நாற்காலி படுக்கை முதலியன காட்சிப்பொருளாக இருந்தன . காலந் தொறும் வாழ்ந்த வகையுடன், இந்நாட்டு இந்தியமக்கள் (Plain Indian of North America) airposuá's sit upou குறிப்பும் கனடா நாட்டுப் பழங்குடிகள் வாழ்க்கைமுறை வளர்ச்சிவகை பற்றியும் உடை, பாண்ட்ங்கள், ஒலைப்பாய் கள் முதலியன பற்றியும் குறிப்புடன் பொருள்களையும் காட்சியாக வைத்திருந்தனர். இன்னும் இந்நாட்டில் காலந்