பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை உலகம் உருண்டையானது. அண்டப் புகுதியின் உண்டைப் பிறக்கம்' என மணிவாசகர் இந்த உண்மையினை என்றோ காட்டி விட்டுச் சென்றார். அப்படியே பரந்து விரிந்த அண்ட கோள எல்லையில் இந்த உலகம் அணுவினுக்கு அணுவாய் மிகமிகச் சிறிய ஒரு உருண்டையே என குறித்துள்ளார். இல்நுழை கதிரின் துன் அணு ஒப்ப, பரந்த அண்ட் கோள எல்லையில் அமைந்த எத்தனையோ கோடானு கோடி தூசுக்ளில் இந்த உலகமும் ஒரு சிறு துாசு. அப்படியே அளவற்ற் நீண்ட கால எல்லையில் நம் வாழ்நாள் நொடியினும் நொடியாகும். மிகமிகக் குறுகிய எல்லையே நம் வாழ்நாள். எனினும் இந்த விரிந்த எல்லையைக் காண்ாத காரணத்தாலேயே இன்றைய மனிதன் தன்னைப் பற்றியும் தன்'உலகைப்பற்றியும் எதை எதையோ எண்ணி எப்படி எப்படியோ கணக்கிட்டுக் காலத்தைக் கழிக்கிறான். ஆம்! அந்த மனித இனத்தில் நானும் ஒருவன்தானே!" என் இளமைக் காலத்தில் இந்த உலகை-இந்திய நாட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட நாடுகளைக் காண வாய்ப்பு இருந்தது. இல்ண்டனுக்கும் ஆப்பிரிக்க நாடு களுக்கும் மலேயாவுக்கும் பணிபுரிய அழைத்தனர் பலர். எனினும் அப்பொழுதெல்லாம் என் மனம் தாயகத்தை விட்டுச் செல்ல இடம் தரவில்லை. இங்கே ஒாண்டில் ஈராண்டில் பெறும் ஊதியத்தை ஒரே திங்களில் தருவித்ர்கக் கூறின் போதிலும் அன்னைத் தமிழும் அகன்ற பார்த்மும் என்னை வெளியே அனுப்பவில்ல்ை; எனக்கு அங்கே கோடி பெறுவதிலும் இங்கே கூழ் குடித்து வாழினும் போதும் என்ற மனநிலை இருந்தது. எனினும் அன்பீர்க்ள் அழைப்பின் வழி இல்ங்கைக்கு மூன்று