பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 20.4.85 139 அப்படியே பலவிடங்களில் அவ்வந்நாட்டில் வாழும் விலங்கு கள், பறவைகள் போன்றவையும் வைக்கப்பெற்றிருந்தன. உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்த பல வன விலங்குகளும், பறவைகளும் இடம் பெற்றிருந்தன. நம் நாட்டு யானையும் ஆப்பிரிக்கா நாட்டு யானைகளுடன் போட்டியிட்டன. எனினும் நம் நாட்டு மயில் கிளி போன்றவற்றை நான் காணவில்லை. நியூயார்க் நகரைச் சுற்றியுள்ள எல்லாப் பறவைகளும் கடல்வாழினங்களும் பிற எண்ணற்ற பொருள் களும் இருந்தன. பாலைவனம், காடு, விளைநிலம் போன்று பல பிரிவுகளைச் சுட்டி, ஆங்காங்கே வாழும் மக்களினத் தன்மைகளையும் பொருட்காட்சி மூலம் விளக்கிக் காட்டி யுள்ளனர். நம் சங்ககாலத்திய நானிலம் என் கண்முன் வரக் கண்டேன். அந்த மாடியில் ஓரிடத்தில் இயற்கை கல்வி Lu?syth Q-lb (Natural'Éducation Centre) @@#gg. ஆயினும் அதில் நான் செல்ல அனுமதிக்கப்பெறவில்லை. கூட்டமாக வரும் பள்ளிப் பிள்ளைகளுக்கென அது அமைந்த தாம். நான் வெளி நாட்டுக்காரன் - இவைபற்றி அறிய ஆர்வமுடையன் என்று கூறினும் பயன் இல்லை. எனவே வேறு பக்கம் திரும்பினேன். நம் நாட்டுக் காட்சிப்பொருள் பக்கம் வந்தேன். (south and South East Asia), gp36% oranorum's go sh பெற்றிருந்தார். தமிழ்நாட்டில் (விந்தியத்திற்கு தெற்கே) 70,000-முதல் 80,000 வரையில் வாழ்ந்த மனித வாழ்வினை யும் கி.மு. 9வது மில்லியனித்திலும் (10,000 ஆண்டில்) விவசாயம், அதற்குப் பயன்படுத்திய கருவிகள், விலங்குகள், கிராம அமைப்பு முதலியனபற்றியும் ஆரப்பா நாகரிக்ம் பற்றியும் குறிப்பு இருந்தது. பனிப்பருவகாலத்தில் (Ice Age) எழுத்து வந்தது என்ற குறிப்பும் இருந்தது. எனக்கு நம் சங்ககாலத்திய குறிப்பு நினைவுக்கு வந்தது. B.C. 2000ல் மொழி ஆய்வு செய்து நான்குவகை மொழியாகக் கண்ட நிலையில் Semitic வகையொடு நம் மொழிகளைச் சார்த்தி யுள்ளனர். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே பிராமி