பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கற்றுத் தர-நேர்முகமாகவும் அஞ்சல்வழியும்-ஏற்பாடு செய்துள்ளதாம். நம் ஊரில் , முதியோர்கல்வி திட்டம் (Adult Education Dept.) Gutsrog Gur Sylh-GpSGuTG#G அடிப்படைக்கல்வி, கலை, வாணிபம், கணிப்பொறி, சமையல், நாட்டியம், நாடகம், உந்து ஒட்டுதல், பொழுது, போக்கு, விளையாட்டு, மொழி, இசை, வீட்டுப்பொருள் களைச் செப்பம் செய்தல் (Repairs), தையல், பூவேலை, முதலானவல்களில் பயிற்சி தருகின்றதாம். மேலும் கவிதை இயற்றல், நல்ல உணவு தேர்ந்தெடுத்தல், சித்திரம்வரைதல் போன்றவற்றிலும் பயிற்றி உளதாம். இவற்றிலெல்லாம் வகுப்பு நடத்திச் சான்றிதழ்களும் வழங்குவார்கள் போலும். நான் தங்கியிருக்கும் வீட்டுக்குரிய திரு. இராதாகிருஷ்ணன் அவர்களும் (வங்கியில் பணியாற்றுகின்றவர்.) கணிப்பெர்றி வகுப்பிற்கு மாலையில் வாரத்துக்கு இருநாட்கள் சென்று பயில்கின்றார். மே மாத இறுதியில் தேர்வு உண்டாம். இவ்வாறு பலவகையில் கற்றோருடன் கல்லாரும் ஒய்வு வேளைகளில் கற்று சரிசமமான வாய்ப்பினைப் பெற வசதி செய்துள்ளமை போற்றத்தக்கது. தமிழ்ச் சங்கத் தலைவர் அவர்கள் மாலை 8 மணி அளவில் மறுபடியும் தொல்ைபேசியில் பேசிக்கொண்டிருந் தார். இங்கே தமிழ்ப்பயில்வார் அருகிய நிலையினையும் ஒரு சில குடும்பங்கள் மட்டும் விடாது தமிழ்நலம் காப்பதை' யும் கூறி, அவர்கள் சங்கம் வெறும் இலக்கியத்தோடன்றி, நடனம், இசை போன்ற நம் நாட்டுக் கலைகளிலும் கருத் திருத்துவதாகக் கூறினர். . . . . . - . இங்கேயே நிலைத்துத் தங்கியுள்ள நம் நாட்டுப் பத்மினி, கமலா ஆகியோர் பல மாணவர்களை நடனத்துறையில் உருவாக்கி உள்ளமையைக் குறித்தார். அமெரிக்க நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் தமிழர்கள் உளரேனும் தமிழ் பயிலு வது அருகிவிட்டதெனவும் வளர வ்ழி காண முயலவேண்டும் எனவும், நாளை மாலை நேரில் வருவதாகவும் கூறினார். நான் வந்த பிற நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து 10 மணிக்கு உறங்கச் சென்றேன். -