பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கணிப்பொறி (Computer) வழியே தாம் கண்ட உண்மை களைச் சரிபார்க்கவும் குறிக்கவும் வகை செய்யப் பெற்றுள் ளது. நான்கு கணிப் பொறிகள் இருந்தன. தவிர, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நூல்களின் விளக்கங் கூறவும் தேவை மானால் எடுத்துத் தரவும் கற்றறிந்த நல்லவர்கள் காத்து நின்றனர். உலகில் இன்று உள்ள எந்த வகையான பாடப் பகுதிக்கும் - ஆய்வுப் பகுதிக்கும் - மொழிப் பகுதிக்கும் - வரலாறு முதலிய அனைத்துக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பெற்றிருந்தன. ஒன்றிய அமெரிக்க நாட்டுப் பல மாநிலங்களுக்கும் உரிய தனிச் சட்டங்களும், பிறவும் அச்சிடப்பெற்றுத் தனித்தனிப் பகுதிகளாக வைக்கப் பெற்றிருந்தன. அமெரிக்க அரசியலை அறிய விரும்புகின்ற வர்கள் உள்ள்ே நுழைந்து பல நாட்கள் தம்மை மறந்து நூல் களுள் புகுந்து.தாமே அதுவாய் நின்று ஆராயின் இன்றைய தலைவர்களால் உணர முடியாத பல உண்மைகளை உணர்ந்து கொள்ள இயலும். - - - அப்படியே ஒவ்வொரு துறை பற்றிய எல்லா நூல்களும் அண்மையில் வெளிவந்தவை உட்பட (மிகப் பழங்காலந் தொட்டு) இருந்த காரணத்தால் பலர் உள்ளே அமைதியாக ஆராய்ச்சி செய்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர். என்னைப் போல் சுற்றி வந்தவர்கள் தவிர்த்து, உண்மை யிலே உட்கார்ந்து ஆய்வு செய்தவர் ஆயிரத்துக்கு மேற் பட்டவராவர். ஆடவர் பெண்டிர் இருவரும் - பல நாட்டினரும் அங்கே ஆய்ந்துகொண்டிருந்தனர். எல்லாத் துறைகளையும் மேல் போக்காகக் கண்டு கொண்டே தமிழ் நூல்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றேன். The New York Public Library” si cirug உண்மையிலேயே மக்கள் நூல் நிலையமாகவே இருந்தது. இந் நூல் நிலையத்தின் வரைப் படத்தினை (மூன்று மாடியினை - ஒன்று நிலை அலுவலகம் போலும்) தனியாக அச்சிட்டு, தேவையானவர்களுக்கு வழி காட்டியாக இருக்க உதவுகின்றனர். - - நான் தமிழ்நூல்கள் பற்றி அறிய விரும்பி அறை 216, 217,219 ஆகியவற்றிற்குச் சென்றேன். முந்திய இரண்டிலும்