பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gurfá 22-4-85 147 மத்தியதரைக்கடலை ஒட்டிய மொழிகள் பற்றிய நூல்கள் Q(55.5%r. (SALVONIC-Languages-Roman and alphabet languages-Balic and Salvic) gausò sóláv 7,24,000 [5frábeseir இருந்தன எனக்காட்டி, பல பகுதிகளாக அவற்றின் அட்டவணையை அ. ச் சி ட் டு வைத்துள்ளனர். (நல்ல. கட்டுடன்). அதற்கு இரண்டு மூன்று பதிப்புகள்கூட வந்துள்ளன. ஒவ்வொரு பதிப்பிலும் அதுவரை வெளியான புதிய நூல்களையும் சேர்க்கின்றனர் போலும் (அது பற்றிய தனிக்குறிப்பு ஒன்றும் இல்லை). . . அவற்றையெல்லாம் கண்டு கொண்டே அறை 219க்குள் (கீழ்த்திசைமொழி நூல்கள் உள்ள அறை) புகுந்தேன். அங்கிருந்தவரைத் தமிழ் நூல் பற்றிக் கேட்டேன். அவர் எழுந்து வந்து, அவை அச்சிட்டிருந்த தொகுதியைக் காட்டி (Volume) தமிழ் பற்றிய பக்கத்தினையும் எடுத்துத் தந்தார். "இந்தியன் என்ற பகுதியிலே பல பெருந்தலைவர்தம் நூல் கள். இந்திய ஆட்சி, ச்ட்டதிட்டம், பிற புதிய நிறுவனங்கள் (U.G.C. போன்றவை), பிற பெரும் அமைப்புக்கள். சங்கங் கள் ஆகியவை இவற்றின் அமைப்பு முறை முதலியன இடம் பெற்றிருந்தன. தமிழ்ப்பகுதியில் பல தமிழ்நூல்கள் இருந்தன எனக் காட்ட வந்தவர். அந்தத் தொகுதியைத் தந்து வேண்டிய நூலைக் கேட்டால் எடுத்துத் தருவதாகவும் சொன்னார். அதற்கெனத் தனி அட்டை ஒன்றையும் என்னிடம் தந்தார். பெரும்பாலும் அங்குள்ளவர்கள் நூல் களின் எண் வரிசை முதலியவற்றை அறிந்து நன்கு பழக்கப் பட்டவர்களாதலின் விரைந்து எடுத்து உதவுகிறார்கள். தமிழைப்பற்றி நான் கேட்டதும் பலநாள் கேளாத ஒன்றைக் கேட்டது போல் மகிழ்ந்து வந்து உதவினார். தமிழ் நூல்கள் பற்றி அவரிடம் வந்து கேட்பவரே இல்லையாம். நியூயார்க் தமிழர்களோ அன்றி அங்கு செல்லும் தமிழகச் செல்வர் களோ தல்ைவர்களோ அரசியலாளர்களோ அமைச்சர் களோ அப்பக்கம் தலை நீட்ட மாட்டார்களோ என்று கருதினேன். அவரிடம் கேட்பதும் நமக்கே இழுக்காகும் என்ற முறையில் வாளா இருந்தேன். கேட்ட இரண்டொரு