பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளடெல்பியா 23.4.85 இன்று காலைக் கடன்களையெல்லாம் முடித்துக் கொண்டு, குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். நியூயார்க் தமிழ்ச் சங்கத் தல்ைவர் திரு. மணி அவர்கள் எனை வழி அனுப்ப 7 மணி அளவில் வந்தார்கள். வீட்டுக் குழந்தைகளுடனும் அவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பிறகு அவர்கள் அலுவலகம் செல்ல, நான் 9.30க்கு மேல் ஒரு வாடகை வண்டியினை அமர்த்திக் கொண்டு கென்னடி (நான் இறங்கிய) விமான நிலையத் துக்கு வந்தேன். ஆம்! மறைந்த இந் நாட்டுத் தலைவர் - இளமையிலேயே மறைக்கப்பட்ட அவர்தம் பெயரால் இந்த விமான நிலையம் இயங்குகிறது. பிளடெல்பியாவிற்குச் செல்லும் பகுதிக்குச் சென்றேன். இங்கே உள்ளுர்ச் சுற்று விமானங்கள் பல தனிப்பட்ட நிறுவனங்கள்ாலும் முதலாளி களாலும் நடத்தப் பெறுகின்றன. பிற விமானங்களும் அப்படியேதான். நான் 11.15க்குப் புறப்படவேண்டிய விமானம் மிகச் சிறியது. பயணிகளும் 25 பேர்தான் இருப்பர். விமானமும் நம் ஊர் பஸ் போல, நாற்பது பேர் கொள்ளக் கூடியது. எதிர்பாராதபடி மூட்டமும் குளிரும் இன்று அதிகம். எப்படியோ நிலையம் வந்து விமானத்தில் புறப்பட்டு 12 மணிக்கு (பறந்த நேரம் 35 நிமிடம் 120 மைல்) பிளடெல்பியா வந்து சேர்ந்தேன். முன்னமே பேராசிரியை இராசம் அம்மையார் நியூயார்க்கிற்குத் தொலைபேசியில் சொல்லி இருந்தம்ையால், அவர்கள் குறித்தபடி சிறு பஸ் பிடித்துக்கொண்டு, நேராக இண்டர்