பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

جہ பிளடெல்பியா 23.4.85 153 நேஷனல் ஹவுஸ் என்ற பெரிய விடுதிக்குச் சென்று சேர்ந்தேன். அது மிகப்பெரியது. 12 அடுக்கு (கீழ் உட்பட) கொண்டது. எதிரிலேயே பல்கலைக்கழகம். University citiy என்றே அப் பகுதிக்குப் பெயர். எனவே யாவும் எளிதாக இருக்கும் என எண்ணினேன். உள்ளே சென்றதும் எனக்காக முன்னமே பதிவு செய்திருந்தப்டியால் சுலபமாக இடம் பெற்றேன். (இன்றேல் கடிது போலும்) பல பல்கலைக்கழக மாணவர் - பல நாட்டினர் - இங்கே தங்கு கின்றனர். எனக்கு 9வது மாடியில் (G. 13) அறையை ஒதுக்கிச் சாவியைத் தந்து என்னை நேரே பேரகுமாறு சொன்னார்கள். யாரும் உதவிக்கும் கிடையாது என்றனர். நல்ல வேளை இரான் நாட்டு மாணவர் ஒருவர் என் வருத்தத்தைக் கண்டு, பெட்டியையும் தூக்கிக்கொண்டு, எனக்குரிய இடத்தில் சேர்த்தார். அவர்கள் கொடுத்த ஒரே சாவியைக் கொண்டே வழியில் உள்ள இரு சிறு பகுதிகளின் கதவுகளைத் திறந்து கொண்டு நான் அந்த அறைக்குச் செல்லவேண்டும். அந்த மாணவர் உதவி இராவிட்டால் சற்றே சிக்கலாகத்தான் இருந்திருக்கும். . அறையில் தங்கச் சென்றபோது மணி 1-30. எனவே ப்சி வேறு; உடனே கீழே இறங்கினேன். அந்த மாணவரே நம் இந்திய நாட்டு - தமிழ்நாட்டு உணவு இரண்டு தெரு கடந்து இருக்கும் என்றும் வேண்டுமானால் அழைத்துச் செல்வதாகவும் கூறினர். இந்த விடுதியிலே கீழே உணவுக் தடமும் இருந்தது. அங்கே சென்று பார்க்கலாம் எனச் சென்றேன். நல்லவேளை அரிசிச் சோறும், காய்கறிகளும் குழம்பும் இருந்தன. விலைதான். அதிகம். நம் ஊர் ரூ. 70/இருந்தாலும் இங்கே எல்லாவிடத்திலும் (நியூயார்க்கிலும் கூட) இதே உயர்மட்டத்தில்தான் உணவுப் பொருள்கள் கிடைப்பதாலும் பசியாக இருந்ததாலும் பெற்றுக்கொண்டு தனி மேசையில் அமர்ந்து மெல்லச் சாப்பிட்டேன். பக்கத் தில் இருந்த மிளகுத்தூளையும் உப்பினையும் தேவையான அளவு சேர்த்துக் கொண்டேன். (இங்கே - இந்த ஒட்டலில்பிற பெரிய ஒட்டல்களிலும் மிளகாய் இல்லை). உணவு