பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 54 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நன்றாகவே இருந்தது - போதுமானதாகவும் இருந்தது. உண்ட பிறகு பல்கலைக்கழகத்துக்கு அம்மையாருக்கு நான் வந்ததைத் தெரிவித்தேன். அவர்களும் பக்கத்திலேயே அவர்கள் துறை இருந்தமையின் 10 நிமிடங்களில் வந்து விட்டார்கள். வந்ததும் மெய்கண்டான் எழுதியிருந்த கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் பயின்றவர்கள் 'B.Sc. பட்டம் பெற்ற பிறகு தமிழ் ஆர்வத்தால் அங்கே சேர்ந்து தமிழ் பயிலத் தொடங்கினார். 1961-63-ல் முடித்து, பின் மணம் முடித்த பின், அங்கேயே ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி, அடுத்து இங்கே வ்ந்து ட்ாக்டர் பட்டத்திற்குப் பயின்று வெற்றி பெற்று இங்கேயே பணி யினை ஏற்றுத் தங்கிவிட்டார்கள். தனித் தமிழில் எளிய முறையில் அனைத்தையும் விளக்கி மாணவர்களுக்குச் சொல்வார்கள் போலும். தொலைபேசியில் பேசியபோதும் இங்கும் அவர்தம் தனித்தமிழ்ப்பற்று நன்கு விளங்கிற்று. மேலும் அவருக்குத் தமிழ் ஆர்வமும் அத் தமிழை மங்காமல் எங்கும் வளர்க்கவேண்டும் என்ற உணர்வும் மிக்கிருக்கக் கண்டேன். இங்கே பல்கலைக்கழகத்தே தமிழ் முதுகலை, இளங்கலை (M.A., B.A.,) வகுப்புகள் இருப்பதாகவும் மொத்தத்தில் பத்து மாணவரே பயில்கின்றனர் என்றும் அனைவரும் தமிழ் ஆர்வம் மிக்கவர் என்றும் கூறினர். நாளை அவர்களுக்கு நான் பேசப்போகும் தமிழ்ப் பல்கலைக் *ịp * QzuáigpsopuỊủ Lug)Ith (Tamll University - ita Func. tlone & Purpose) என்ற பொருள்பற்றியும் பேசினோம். என்னுடைய நூல்களில் சில பாடமாகவும் பொதுவாகவும் அவர்கள் முன்னரே படித்துள்ளமையின் என்னைப்பற்றிக் கேட்டறிந்தார்கள். வள்ளியம்மை கல்வி அறம்பற்றி சொன்னபோது, க்ல்வி வளர்க்கும் நிலையினை - தமிழாசிரி யர் மேற்கொண்ட பணியினைப் பாராட்டிப் போற்றினர். நாளை நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டிகளின் படிகளையும் தந்தனர்.