பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளடெல்பியா 23-4.85 157 அப்படியே பல்கலைக்கழகத்தே பலப்பலவகையான நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன. என்னை அழைத்துச் சென்ற தமிழ்ப் பேராசிரியை இன்று கணிப்பொறி சம்பந்தமான கூட்டத்துக்குச் செல்வதாகச் சொல்லிச் சென்றார்கள். இரவு சரியாக 7.30 மணிக்கு அவர்கள் என்னை உணவுக்கு அழைக்க வந்தார்கள். அவர்களோடு இரு தெருக்கள் கடந்து இந்தியநாட்டு உணவு விடுதி ஒன்றில் புகுந்தோம். நம் நாட்டு சோமாசு, பூரி, சப்பாத்தி, அரிசிச் சோறு அத்தனையும் இருந்தன. நல்ல தயிறும் மோரும்கூடத் தருகிறார்களர்ம். காலையில் இட்டலி இல்லை. மாலையில் மசாலா தோசை, வடை உண்டு. நாங்கள் அங்கே சிறக்க உணவு கொண்டோம். சற்றே குளிர் அதிகமாக இருந்தது. இதுவரை இத்தகைய குளிரில் நான் சென்றதில்லை. ஒரு வேளை என்றும் நான் 8மணிக்கு மேல் வெளியே செல்லாத காரணத்தால் நான் அதை உணர முடியவில்லையோ என நினைத்தேன். அவர்கள் உண்மையிலேயே இன்று குளிர் அதிகமாக இருப்பதாகக் கூறினர். உணவுக்குப் பிறகு என்னை விடுதிக்கு அழைத்து வந்துவிட்டு, அங்குள்ள வடமொழி பயிலும் மாணவர் ஒருவரை எனக்கு அறிமுகப் படுத்தி, அவரை என்னை அழைத்துக்கொண்டு அவர்தம் துறைக்குக் காலை 11 மணி அளவில் வரச்சொன்னார்கள். அமெரிக்கர் தெலுங்கு பயின்று பின் வட மொழி பயிலுபவர். அத்துடன் தமிழும் பயில்பவர் - அவ்வாறு செய்வதாகக் கூறினார். அவர்கள் விடைபெற்றுச்சென்ற பின் உறங்னேன். - -