பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளடெல்பியா 24-4.85 இன்று காலை முறைப்படி எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, பத்துமணி வரை குறிப்பு எழுதியும் பிற பணிகள் செய்தும் இருந்து, 10 மணிக்குப் பல்கலைக்கழகத் துக்குப்புறப்பட்டேன்.இங்கே, வடமொழிபயிலும் இந்நாட்டு மாணவர், முந்நாள் மாலை கண்டவர் விடுதியில் இருந்து பல்கலைக்கழக அறைக்கு அழைத்துச் சென்றார். நான் முன்னரே குறித்தபடி இந்த இடமே - யூனிவர்சிடி சிட்டி’ என்ற பகுதியே பெரும்பாலும் பல்கலைக்கழத்துக்கே உரிய இடம். தமிழ் பயிற்றும் அறையும் அருகில் இருந்தது. பல்கலைக்கழக முழுவதும் மாணவர் கூட்டம். எம். ஏ. படிப்பவர் மட்டும் நாலாயிரம் பேர் இருப்பார்கள் என்றனர். பின் கீழ் பி. ஏ. மேல் ஆய்வுப்பட்டங்கள் பயில்பவர் பலர். எனவே நான் சென்ற அந்த நேர்த்தில் 10.30க்கு எங்கும் மாணவர் கூட்டம் விரைந்து வகுப்பறைகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை 11 மணி அளவில் "எம். ஏ. மாணவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் மதிப்பீட்டு நேர்முக ஆய்வு உள்ளதெனவும் அதில் என்னை யும் கலந்து கொள்ளுமாறும் அழைத்திருந்தனர். South East Asian Studles' Qĝ6ör $pë@ -9,8ïuj -gúøJúLg;ĝi, ஆதலின்,அதில் தமிழ்மட்டுமன்றி பலதுறையினரும் - மொழி யினர் மட்டுமன்றி, இந்த நாடுகளில் வரலாறு, அகழாய்வு, பொருளியல், வாழ்வியல் ஆகியவை பற்றிய துறையினரும் கலந்து கொண்டனர். சுமார் அறுபது பேர் (பலர் பேராசிரி யர்கள்) கலந்து கொண்டனர். நானும் அவர்களுடன் சென்று அமர்ந்தேன். அதற்கு முன்பே அத்துறையின் தலைவராக உள்ளவரும் என்னை இங்கு வருமாறு பலமுறை